Header Ads

  • சற்று முன்

    குட்காவிவகாரம் அமைச்சர், காவல்துறை அதிகாரிகள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் - ஜி.ராமகிருஷ்ணன்


    கோவில்பட்டி வள்ளுவர் நகரில் சி.பி.எம் கட்சி சார்பில் ஏ.கே.ஜீ. நினைவு படிப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. நகரக்குழு உறுப்பினர் சக்கரையப்பன் தலைமை வகித்தார், கிளை செயலாளர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக சி.பி.எம். அரசியல் தலைமை செயற்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு திறந்து வைத்து சிறப்புரையாற்றினர். தொடர்ந்து லாயல்மில்காலனியில் கட்சி நிர்வாகி அபிராமி முருகன் புதியதாக கட்டியுள்ள திருமண மண்டபத்தினையும் திறந்து வைத்தார். நிகழ்ச்சிகளில் மாநிலக்குழு செயற்குழு உறுப்பினர் கனகராஜ், மாநிலக்குழு உறுப்பினர் மல்லிகா, மாவட்ட செயலாளர் அர்ச்சுணன், விவசாய தொழிலாளர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் சீனிவாசன், சி.பி.எம். நகர செயலாளர் முருகன், ஒன்றிய செயலாளர் ஜோதிபாசு, முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் முத்துராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 



    இதன் பின்பு ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் அங்கு சுற்றுவட்டாரமே பாதிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகி கொண்டிருக்கிறது. எனவே அந்த ஆலையை மூடுவதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை நடைபெறுவதற்கு அந்த கம்பெனியிடம் கையூட்டு வாங்கியதாக அமைச்சர், காவல்துறை அதிகாரிகள் மீது மாநில காவல்துறை விசாரித்து வந்தது.ஆனால் மாநில காவல்துறை விசாரணை பொருத்தமற்றது. சிபிஐ விசாரிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், காவல்துறை அதிகாரிகள் ராஜினாமா  செய்ய வேண்டும் என்றும், 

    தமிழகத்தில் உயர்கல்வி என்பது கடுமையாக பாதிப்புக்குள்ளாகி உள்ளது. துணை வேந்தர் நியமனத்தில் ஊழல், பேராசிரியர் நியமனத்தில் ஊழல், சமீபத்தில் அருப்புகோட்டை கல்லூரியை சேர்ந்த பேராசிரியை மாணவிகளை தவறாக வழிக்கு முயற்சி எடுத்ததாக குற்றச்சாட்டுள்ளது. முருகன் கைது செய்யப்பட்டுள்ளார், ஆனால் அந்த பேராசிரியையுடைய உரையாடலில் ஆளுநர் சம்பந்தப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. எனவே ஆளுநர் குற்றம்சாட்டுக்கு ஆளான நிலையில், அவரது விசாரணை சட்ட ரீதியாக ஏற்கதக்கதல்ல. அந்த விசாரணையை ரத்து செய்ய வேண்டும். புலன் விசாரணை உயர்நீதிமன்றம் மேற்பார்வையில் விசாரணை நடைபெற வேண்டும். இந்த கல்வி ஆண்டு துவங்க இருக்கிறது. தனியார் சுயநிதி கல்லூரிகள், பள்ளிகள் அரசு நிர்ணயித்த கட்டணத்துக்கு அதிகமாக வசூலிக்க அனுமதிக்க கூடாது. அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும்,  எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி அமைந்த பின்னரும் தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ளது. அரசு நியமனத்தில் சத்துணவு பணியாளர் முதல் துணைவேந்தர் வரை ஊழல் மலிந்து வருகிறது. இதனை தடுக்க மாநில அரசு உடனடியாக ஊழல் தடுப்பு சட்டம் கொண்டு வர வேண்டும். பெண் பத்திரிகையாளர்கள் குறித்து எஸ்.வி.சேகர் அநாகரீகமாக பேசியதற்கு அவர் மீது வழக்கு தொடர்ந்து அவரை கைது செய்ய வேண்டும் என்றார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad