கோவில்பட்டி அருகே வைகோ நோக்கி மது பாட்டீல் வீச்சு பரபரப்பு!!
தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி, கோவில்பட்டியில் இருந்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாகனப்பிரச்சாரம் தொடங்கியுள்ளார்,
கோவில்பட்டி, எட்டயபுரம், நாகலாபுரம், புதூர், விளாத்திகுளம், சூரங்குடி, வேம்பார் ஆகிய இடங்களில் வாகன பிரச்சாரம் செய்து இறுதியாக குளத்தூரி;ல் வைகோ பேசிக்கொண்டு இருந்தார் அப்போது தீடீரென அவரின் பின்னால் நின்ற தொண்டர் படை வாகனத்தில் மது பாட்டீல் உடைந்த சத்தம் கேட்டது. இந்த தீடீர் சத்ததின் காரணமாக வைகோ தீடீரென பேச்சை நிறுத்தினர். அருகில் மாடியில் இருந்த போட்டோ ஸ்டியோ வாயில் பகுதியில் இருந்து மர்ம நபர் ஒருவர் வைகோ நோக்கி மது பாட்டீல் வீசி விட்டு தப்பியோடியுள்ளார்,
அந்த பாட்டீல் அதிர்ஷ்ட வசமாக தொண்டர்படை வாகனத்தில் பட்டு கீழே விழுந்த காரணத்தினால் யாருக்கும் ஏற்படவில்லை, இதனால் அதிர்ச்சியடைந்த தொண்டர்கள் மாடியில் இருந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் விரைந்து சென்று இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர், மேலும் மாடிப்பகுதியில் இருந்தவர்களை விசாரணைக்காக அழைத்து சென்றனர். இதையெடுத்து வைகோ மீண்டும் தனது பேச்சினை தொடர்ந்தார். இதன் காரணமாக சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
கருத்துகள் இல்லை