அனைவருக்கும் வீடு திட்டத்திற்கு பூமி பூஜை ........அமைச்சர் கடம்பூர் ராஜு

கோவில்பட்டி கிருஷ்ணாநகரில் தமிழ்நாடு குடிச்சைப்பகுதி மாற்ற வாரியம் மூலமாக 2.22 ஏக்கர் பரப்பளவில், ரூ.8 கோடி மதிப்பீட்டில் 92 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க விழா மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழகசெய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ செய்தியாளர்களிடம் பேசுகையில்
மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாகவும், எல்லோருக்கும் இருப்பிடத்தை உறுதி செய்யும் விதமாகவும் மகத்தான திட்டத்தை மத்திய, மாநில அரசு மூலமாக நடைமுறைப்படுத்தி அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசு வீடு இல்லாதவருக்கு எல்லாம் வீடு கட்டும்பொருட்டு ஆய்வுக் கூட்டம் நடத்தி முதற்கட்டமாக மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கு அடுத்த கட்டமாக பேரூராட்சி பகுதிகளிலும் வீடு கட்டும் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. நிலங்களை ஆக்கிரமித்து குடியிருப்பவர்களை அந்த இடத்தை விட்டு அற்புறப்படுத்தும் போது அவர்களுக்கும் புதிதாக வீடு கட்டிதரும் நோக்கில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான ஏழை, எளிய, நடுத்த மக்கள் பயன் அடைந்து வருகிறார்கள். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தான் நில அபகரிப்பு சட்டத்தை முதன் முதலில் கொண்டு வந்து ஆக்கிரமிப்பு நிலங்களை உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்தார்கள். இதனால் பெரும்பாலான பொதுமக்கள் பயன் அடைந்தார்கள்தற்போது கட்டப்படும் இந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஒவ்வொரு குடியிருப்பும் 31.165 ச.மீ பரப்பரளவில் கட்டப்படவுள்ளது. வீட்டின் மதிப்பு ரூ.8.7 இலட்சமாகும். மத்திய அரசின் பங்களிப்பு ரூ.1.5 இலட்சமும்;, மாநில அரசின் பங்களிப்பு ரூ.6 இலட்சமும்;, பயனாளிகளின் பங்கு தொகை ரூ.1.7 இலட்சமாக உள்ளது. இந்த அடிக்குமாடி குடியிருப்பில் அடிப்படை வசதிகளான சாலை வசதி, தெருவிளக்கு வசதி, மின்சார வசதி மற்றும் குடிநீர் வசதியுடன் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியும் அமையப்பெறவுள்ளது. ஆழ்துளைக்கிணறுகள் மூலமாகவும் குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், விரைவில் கட்டுமானப்பணிகள் நிறைவு செய்து பயனாளிகளுக்கு வீடுகளை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 92 வீடுகள் தவிர அடுத்த கட்டமாக 120 வீடுகள் ரூ.10.44 கோடி செலவில் கட்டப்பட உள்ளது. இதன் மூலம் கோவில்பட்டி நகராட்சி பகுதிகளில் வாழும் சொந்த வீடு இல்லாத மக்கள் பெரும்பாலானோர் பயனடைவார்கள். அவர்களின் சொந்த வீடு கனவும் நனவாகும் என்றார். தொடர்ந்து நிர்மலா தேவி பிரச்சினையில் காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.ஆளுநர் அறிக்கை,விசாரணை கமிஷசன் அமைத்தாலும் அரசு துரிதமாக காவல்துறை மூலம் விசாரணை நடைபெற்று வருகிறது.நிர்மலாதேவியுடன் தொலைபேசி பேசியவர்கள் எண்கள் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.இந்த விஷயத்தில் அரசு மெத்தனமாக இல்லை என்றும், ஸ்டெர்லைட் ஆலை நிரந்தர மூட அரசு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது, சில விஷயங்கள் மத்தியரசு கட்டுப்பாட்டில் வருகிறது, மத்தியரசுவுடன் ஆலோசனை நடத்தி நிரந்தர தீர்வு காணப்படும்மக்களின் உணர்வுகளை புரிந்து ஆலைக்கான அரசு உரிமத்தினை ரத்து செய்து மூடங்கி வைத்துள்ளது.சட்டபூர்வமான பணிகளை அரசு தொடர்ந்து செய்து வருகிறது என்றும், திமுக ஆட்சி காலத்தில் சட்ட ஒழுங்கு சீர் கேடு, கடும் மின்வெட்டு இருந்தது, அதிமுக ஆட்சி காலத்தில் தான் மின்மிகைமாநில மாறி மின்வெட் என்ற பேச்சுக்கு இடமில்லை, குஜராத்திற்கு அடுத்தப்படியாக காற்றாலை மின்சார உற்பத்தில் தமிழகம் தான் உள்ளது.அதிமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு சீரமைக்கப்பட்டது.மத்தியரசு வெளிநாடுகளுக்கு போய் தான் முதலீட்டர்களை கொண்டு வருகின்றனர். ஆனால் அதிமுக தான் 2013 முதல் உலக முதலீட்டர்களை இங்கு வரவழைத்து, 65 ஆயிரம் கோடிக்கு தொழில முதலீடுகள் வந்துள்ளன.தொழில் வளர்ச்சியில் படிப்படியாக முன்னேறியுள்ளது, தங்கள் ஆட்சி காலத்தில் நடைபெற்ற அவலங்களை மறைக்க அரசியலுக்காக மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டுகின்றார்.தமிழகத்தில் பாலியல் வன்முறை எங்கு நடைபெற்றலும், மின்னல் வேகத்தில் நடவடிக்கை எடுத்துள்ளது, சம்பந்தபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.திமுக ஆட்சி காலத்தில் நியமிக்கபட்ட பல்கலைகழக துணை வேந்தர்கள் சிறையில் உள்ளனர்.ஆளுநர் அதிகாரம் மீறிவில்லை, காலம் காலமாக உள்ள மரபினை தான் செய்கிறார் என்று தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் ஜெயசெல்வம்,தாசில்தார் பரமசிவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை