கோவில்பட்டியில் வைகோவிற்கு கருப்புக்கொடி காட்ட முயன்ற 54 பா.ஜ.கவினர் கைது
கோவில்பட்டியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி வாகன பிரச்சாரம் மேற்கொள்ள வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு பா.ஜ.கவினர் கருப்புக்கொடி காட்ட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பிரதமர் மோடி குறித்து அவதூறூக வைகோ பேசிவருவதாகவும், மேலும் பிரிவினைவாதத்தினை தூண்டும் வகையில் பேசி வருவதாகவும், எனவே வைகோ கோவில்பட்டிக்கு வரக்கூடாது திரும்பி போக வலியுறுத்தி பாரதிய ஜனதாகட்சியினர் மாவட்ட செயலாளர் சிவந்தி.நாராயணன் தலைமையில் கோவில்பட்டி அண்ணாபஸ் நிலையம் வழியாக பயணியர் விடுதிக்கு கருப்புக்கொடி மற்றும் பா.ஜ.க கொடியுடன் வந்தனர், இதனை தொடர்ந்து டி.எஸ்.பி.ஜெபராஜ் தலைமையிலான போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். சிறிது நேரம் பஸ் நிலையத்தில் அமர்ந்து வைகோவிற்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் மதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் இருதரப்புக்கு இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது.இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க நகரதலைவர் வேல்ராஜா உள்பட 54பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். தொடர்ந்து வைகோ கோவில்பட்டியில் இருந்து பிரச்சாரத்தினை முடித்து சென்றதும், அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இதனால் பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கருத்துகள் இல்லை