கோவில்பட்டி அருகே கைலாசநாதர் திருக்கோவில் சித்திரை திருத்தேரோட்டம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள பசுவந்தனையில் ஆனந்தவள்ளியம்மன் உடனுறை கைலாசநாதர் திருக்கோவில் உள்ளது. தென்மாவட்டங்களில் சுயலிம்பு லிங்கமாக சிவன் உள்ள கோவிலில் இதுவும் ஒன்று. இக்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டுக்கான திருவிழா கடந்த 20ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் ஒவ்வொருநாளும் சுவாமி, அம்பாள் பல்வேறு ரதங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.இதனை முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து சுவாமி, அம்பாள் திருத்தேரில் எழுந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். சிறப்பு பூஜைகளுடன் பக்தர்களின் கரகோஷங்களுக்கு இடையில் திருத்தேர் இழுக்கப்பட்டது. நான்ரத வீதிகளை சுற்றி வந்து மீண்டும் நிலையை வந்தடைந்தது.இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான மக்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை