Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டி அருகே தனியார் காற்றாலைக்கு எதிர்ப்பு - வாகனங்களை சிறை பிடித்து போராட்டம்


    கோவில்பட்டி அருகே உள்ளது அச்சங்குளம் கிராமம். வுpவசாயத்தினை முக்கிய தொழிலாளாக கொண்ட இந்த கிராமத்தில் சுமார் 400 ஏக்கருக்கு மேலாக மானவாரி விவசாயம் நிலங்கள் உள்ளன. இந்நிலையில் சில தனியார் காற்றாலை நிறுவனங்கள் இப்பகுதியில் உள்ள சிலரிடம் இடங்களை விலைக்கு வாங்கி காற்றாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு இப்பகுதியியை சேர்ந்த விவசாயிகளும், பொது மக்களும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். காற்றாலை நிறுவனங்களால் விவசாயம் முற்றிலுமாக பாதிக்கப்படுவது மட்டுமின்றி, நிலத்தடி நீர் மட்டும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும், இது தவிர நீர் வரத்து ஓடைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டள்ளதால், மானவாரி விவசாய நிலங்கள் முற்றிலும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே காற்றாலை நிறுவதை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி 100க்கும் மேற்பட்டவர்கள் தனியார் காற்றாலை வாகனங்களை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தனியார் காற்றாலை நிறுவனங்களுக்கு எதிராகவும், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் மக்களின் எதிர்ப்பினை மீறி காற்றாலை நிறுவ முயன்றால் மிகப்பெரிய அளிவில் போராட்டத்தில் ஈடுபடபோவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad