Header Ads

  • சற்று முன்

    சுகாதாரம் என்பது ஒவ்வொருவரின் பொறுப்பு - கோவில்பட்டி அருகே நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் - மாவட்ட ஆட்சியர் பேச்சு


    கோவில்பட்டி அருகேயுள்ள அய்யனேரி கிராமத்தில் உள்ள திருமண மண்டபத்தில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் கலந்து கொண்டு பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில் தமிழக அரசின் திட்டங்கள் அனைத்தும் கிராமப் புறங்களில் வாழும் மக்கள் அறிந்து பயன்பெறும் வகையில், மாதந்தோறும் மாவட்டத்தில் உள்ள, ஒரு வட்டத்தின் தாலுகா அளவில், கிராமத்தை தேர்ந்தெடுத்து, துறை சார்ந்த அலுவலர்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டு வருகிறது. மக்கள் இருப்பிடத்திற்கு அரசு அலுவலர்கள் நேரடியாக சென்று இது போன்ற முகாம்கள் நடத்தப்பட்டு, அரசின் நலத்திட்ட உதவிகள் தகுதியான பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் நடைபெற்ற முதற்கட்ட மனுநீதி நாள் முகாமில் இப்பகுதி மக்களிடம் இருந்து 169 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இதில் தகுதியான 94 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது. எஞ்சிய 75 மனுக்கள் பரிசீலனையில் உள்ளது.

    மேலும், நமது மாவட்டத்தை முழு சுகாதாரமான மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தங்களது வீடுகள் மற்றும் சுற்றுப் புறத்தில் உள்ள தேவையற்ற பொருட்களில் நல்ல நீர் தேங்கி இருந்தால் அதனை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். டெங்கு கொசு நல்ல நீரில் தான் உருவாகிறது என்பதனை, பொது மக்கள் மனதில் கொள்ள வேண்டும். மேலும், காய்ச்சல் போன்ற நோய்கள் ஏற்படும் போது, அரசு மருத்துவர்களின் ஆலோசனையின் படி மருந்துகளை உட்கொள்ள வேண்டும். தாமாக மருந்துகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். 


    திறந்த வெளியில் மலம் கழித்தால், சுகாதரக் கேடு ஏற்படும். மேலும், டயோரியா போன்ற நோய்கள் ஏற்பட்டு உயிருக்கே ஆபத்து விளைவிக்கும்.  சுகாதாரம் என்பது ஒவ்வொருவரின் பொறுப்பு என்பதை உணர்ந்து, திறந்த வெளியில் மலம் கழிப்பதை தவிர்க்க வேண்டும். தங்களது வீடுகளில் உள்ள தனிநபர் இல்லக் கழிப்பறையை பயன்படுத்தி நமது சமுதாயத்தை, ஆரோக்கியமான சமுதாயமாக உருவாக்கிட வேண்டும். பொது மக்கள் இது போன்ற முகாம்களில் கலந்து கொண்டு அரசின் நலத்திட்ட உதவிகள் பெற்று பயன் பெற வேண்டும் என்றார்.

    இம்முகாமில் வருவாய்த்துறையின் மூலம் 16 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா, 17 பயனாளிகளுக்கு பட்டா மாற்றம், 16 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டதை கிராம கணக்கில் பதிவு செய்தல், 21 பயனாளிகளுக்கு முதியோர் மற்றும் விதவை உதவித்தொகை, 1 பயனாளிக்கு திருமண உதவித்தொகை, 2 பயனாளிகளுக்கு ஈமச்சடங்கு உதவித்தொகை, 8 பயனாளிகளுக்கு உழவர் பாதுகாப்பு அட்டைகள், 50 பயனாளிகளுக்கு மின்னனு குடும்ப அட்டைகள், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலம் சுடலை என்ற மாற்றுத்திறனாளிக்கு மூன்று சக்கர வண்டி, இராமலெட்சுமி என்ற மாற்றுத்திறனாளிக்கு சக்கர நாற்காலி, 2 மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன ஊன்றுகோல் வேளாண்மைத்துறையின் மூலம் 5 விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள், அமல்ராஜ் என்ற விவசாயிக்கு ரூ.9,500ஃ- மதிப்பிலான Sprinkler , கருப்பசாமி என்ற விவசாயிக்கு ரூ.36,180ஃ- மதிப்பிலான Raingun ஆகிய நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். 

    இம்முகாமில் கோவில்பட்டி கோட்டாட்சியர் பி.அனிதா, இணை இயக்குநர் (வேளாண்மை) (பொ) முத்து எழில், தனித்துணை ஆட்சியர் (சமூகபாதுகாப்புத்திட்டம்) காமராஜ், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) கோவில்பட்டி மரு.போஸ்கோராஜா,    மாவட்ட வழங்கல் அலுவலர் செழியன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவாஸ்கான், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கீதா, மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் தனலெட்சுமி, திட்ட அலுவலர், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் முத்துலெட்சுமி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன், வட்டாட்சியர்.ஜாண்சன் தேவசகாயம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad