Header Ads

  • சற்று முன்

    தமிழக பள்ளிகளில் விரைவில் யோகா ஆசிரியர்கள் நியமனம் – அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ


    கோவில்பட்டியில் உள்ள எஸ்.எஸ்.டி.எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் யோகாவில் உலக சாதனை மேற்கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த சாதனை நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை கல்லூரி செயலாளர் கண்ணன் வரவேற்றார்.கல்லூரி பொருளாளர் மகேஷ், கல்லூரி முதல்வர் சிவசுப்பிரமணியன், மதுரை காமராஜ் பல்கலைகழக முன்னாள் உடற்கல்வி இயக்குநர் சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அக்கல்லூரியை சேர்ந்த வரலாற்றுதுறை முதலாமண்டு மாணவர் மாரிக்கண்ணன் யோகா சிரசானம் மூலமாக சுமார் 1மணி தலைகீழாக நின்று உலக சாதனை படைக்கும் முயற்சியை மேற்கொண்டார். 



    இந்த யோகா சாதனை முயற்சியை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.ராஜீ தொடங்கி வைத்து பேசுகையில் இயந்திரதனமான வாழ்க்கையில் பல்வேறு பிரச்சினைகள், உணவு பழக்கவழக்க முறைகள் மாற்றம், சுற்றுச்சுழலால் பாதிக்கப்பட்டு பல்வேறு நோய்கள் தாக்கப்பட்ட நேரத்தில் மனதினையும், உடலினையும் ஒருநிலைப்படுத்துவது யோகா தான், அதனை உணர்ந்த நாடே யோகாவினை தேடி செல்லும் நிலை உள்ளது.மனதிற்கும், உடலுக்கும் நல்ல பயிற்சியாக உள்ள யோகாவினை ஒரு இயக்கமாக அறிவித்து மத்திய, மாநில அரசுகள் ஊக்குவித்த வருகின்றனதமிழக பாடத்திட்டத்தில் யோகா ஒரு பாடமாக கொண்டு வரபடுவது மட்டுமின்றி, யோகா பயிற்சி அளிக்க அனைத்து பள்ளிகளிலும், விரைவில் யோகா ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.

    இதனை தொடர்ந்து சாதனை முயற்சி செய்த மாணவர் மாரிக்கண்ணன் மற்றும் அவரது பெற்றோர்களை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ பாராட்டி பரிசு வழங்கினார். 

    நிகழ்ச்சியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குநர் சேது, கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்க செயலாளர் ஜெயபாலன், தமிழ்நாடு சுவாமி விவேகானந்த யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழக நிறுவனர் சுரேஸ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் கல்லூரி உடற்கல்வி இயக்குநர் சந்திரன் நன்றி கூறினார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad