கோவில்பட்டி அருகே காற்றாலை அமைக்க எதிர்ப்பு - தூக்கு கயிறு மாட்டி மக்கள் போராட்டம்
கோவில்பட்டி அருகே உள்ள அச்சங்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் சுமார் 400 ஏக்கருக்கு மேலாக விவசாயம் நிலங்கள் உள்ளன.இந்நிலையில் சில தனியார் காற்றாலை நிறுவனங்கள் இப்பகுதியில் உள்ள சிலரிடம் இடங்களை விலைக்கு வாங்கி காற்றாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு இப்பகுதியியை சேர்ந்த விவசாயிகளும், பொது மக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த காற்றாலை நிறுவனங்களால் விவசாயம் முற்றிலுமாக பாதிக்கப்படுவது மட்டுமின்றி, நீர் வரத்து ஓடைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டள்ளதால், மானவாரி விவசாய நிலங்கள் முற்றிலும் பாதிக்கப்படும் நிலை உள்ளதால், காற்றாலை நிறுவதை தடுக்க வலியுறுத்தி கடந்த சில தினங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தங்களுடை வாழ்வாதரம் முற்றிலுமாக பாதிக்கப்படுவதாகவும், அதனை அரசுக்கும் தனியார் காற்றாலை நிறுவனத்திற்கும் உணர்த்தும் வகையில் அக்கிராமத்தினை சேர்ந்த மக்கள், விவசாயிகள் , அங்கியிருந்த தனியார் காற்றாலை நிறுவனங்களில் வாகனங்கள் மீது கயிற்றின் ஒரு பகுதியினை கட்டியும், மறு பகுதியினை தங்களது கழுத்தில் தூக்கு போன்று மாட்டிக்கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை அகற்றினர். காற்றாலையை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தீக்குளித்து தங்களது உயிரினை மாய்த்துக்கொள்வோம் என்று தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
கருத்துகள் இல்லை