ராமநாதபுர கமுதியில் மர்ம காய்ச்சல் - மக்கள் அவதி !
ராமநாதபுரம்: கமுதி அருகே வேகமாக பரவி வரும் மர்ம காய்ச்சலால் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கிராம மக்கள் பெரும் பீதியில் உள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கிராமம் பறையங்குளம். இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களாகவே மர்ம காய்ச்சல் ஒன்று பொதுமக்களிடம் பரவி வருகிறது.இதன் காரணமாக காத்தனேந்தல் என்ற கிராமத்தில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்த நிலையில், தற்போது 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.மேலும் பலர் காய்ச்சலால் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதால் சுகாதாரத்துறை மற்றும் ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இவைதவிர கோவிலாங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உரிய சிகிச்சை அளிக்காமல் அலைக்கழிப்பதாக புகார் எழுந்துள்ளது.
கருத்துகள் இல்லை