டாக்டர்கள் சங்க நிர்வாகிகள் மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் நட்டா அவர்களுடன் சந்திப்பு.
அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் உயர் சிறப்பு மருத்துவக் கல்வியில் 50% இட ஒதுக்கீடு வழங்குவது. அகில இந்திய தொகுப்பு முது நிலை மருத்துவ இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்குவது... அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் 50% இட ஒதுக்கீடு வழங்குவது...
DM,MCh போன்ற உயர் சிறப்பு மருத்துவக் கல்வியில் தமிழகத்தின் உரிமையை காப்பது... உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை ,மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மாண்புமிகு நட்டா அவர்களை டெல்லியில் இன்று (3.4.18) சந்தித்து , சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் ( DASE) & அரசு அனைத்து டாக்டர்கள் சங்கம்(GADA) நிர்வாகிகள் வழங்கினர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு செயலாளர் தோழர் D.ராஜா MP உடன் இருந்தார். அமைச்சர் நட்டா அவர்கள் கோரிக்கைகளை கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டார். நியாயமான கோரிக்கைகள் (Genuine demands) என அமைச்சர் கூறினார். அவரது ஆலோசனை அடிப்படையில், உயர் அதிகாரிகளை நிர்வாகிகள் சந்தித்து வருகின்றனர்.
அரசு அனைத்து டாக்டர்கள் சங்க (GADA) தலைவர் சி.சுந்தரேசன், துணைத் தலைவர் டாக்டர் ஆர். சக்தி ராஜன், சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க (DASE) தலைவர்களில் ஒருவரான டாக்டர் ஆர். ராமதாஸ் ,பொதுச் செயலாளர் டாக்டர். ஜி.ஆர்.இரவீந்திரநாத் ஆகியோர் , இம் மருத்துவர்கள் சங்கங்களின் குழுவில் இடம் பெற்றிருந்தனர்.
கருத்துகள் இல்லை