• சற்று முன்

    கணித பேராசிரியர் நிர்மலா தேவியுடன் தாவரவியில் பேராசிரியருக்கு சிபிசிஐடி சம்மன்


    பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக தூத்துக்குடியில் பெண்கள் கல்லூரி பேராசிரியை ஒருவருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

    கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற விவகாரம் தொடர்பாக, பேராசிரியை நிர்மலாதேவி, அருப்புக்கோட்டையில், கடந்த 16-ம் தேதி கைது செய்யப்பட்டார். அவரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க, சிபிசிஐடி போலீசாருக்கு, சாத்தூர் நீதிமன்றம் அனுமதி அளித்தது.  இதனையடுத்து, சிபிசிஐடி சிறப்பு அதிகாரி எஸ்பி ராஜேஸ்வரி தலைமையில், நிர்மலா தேவியிடம், கடந்த சில நாட்களாக விருதுநகரில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தூத்துக்குடியைச் சேர்ந்த பெண்கள் கல்லூரி பேராசிரியை ஒருவருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். தூத்துக்குடி பீச் ரோட்டில் உள்ள பெண்கள் கல்லூரியில் தாவரவியல் துறை பேராசிரியையாக பணியாற்றி வரும் அவருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அளிக்க வந்ததாகவும், ஆனால், அவர் அதனை பெற மறுக்கவே அவரது வீட்டின் கதவில் சம்மனை ஒட்டிச் சென்றுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad