கோவில்பட்டி அருகே நாகலாபுரத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்ட போலி உரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கோவில்பட்டி பகுதியில் அதிகளவு போலி உரங்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் விவசாயிகள், விவசாய சங்க அமைப்புகள் புகார் அளித்து வந்த நிலையில், கோவில்பட்டி அருகே குருமலையில் செயல்பட்டு வரும் உரக்கடையில் விவசாயி லெட்சுமணபெருமாள் என்பவர் தனது நிலத்திற்காக உரம் வாங்கியுள்ளார். வாங்கி பார்த்த போது அது போலி உரம் என்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து, தமிழ் விவசாயிகள் சங்க மாநில தலைவர் ஓ.ஏ.நாரயணசாமி தலைமையில் விவசாயிகள் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள கூடுதல் வேளாண்மை கிட்டங்கி மையத்தினை முற்றுக்கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போலி உரங்களை விற்பனை செய்பவர்கள் மீதும், தயாரிப்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Tags:
தமிழகம்
