• சற்று முன்

    ஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் திமுகவின் நிலைப்பாடு - எம்.எல்;.ஏ.கீதாஜீவன்


    கோவில்பட்டி நகராட்சியில் சொத்து வரி, குடிநீர் கட்டணம் மற்றும் அதற்கான வைப்பு தொகை, பிறப்பு, இறப்பு சான்றிதழ் கட்டணம் ஆகியவை உயர்த்தப்பட்டதை கண்டித்தும், குப்பை அள்ள வரி விதிக்கப்பட்டதை கண்டித்தும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ தலைமை வகித்து பேசினார். மதிமுக மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ், மாவட்ட இளைஞரணி செயலாளர் விநாயகா ரமேஷ், நகர செயலாளர் பால்ராஜ், ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன், திமுக நகர  செயலாளர் கருணாநிதி, வர்த்தகர் அணி மாவட்ட செயலாளர் ராஜகுரு, மாவட்ட மகளிர் தொண்டரணி செயலாளர் இந்துமதி, இந்திய கம்யூனிஸ்ட் நகர செயலாளர் சரோஜா, மார்க்சிஸ்ட் நகர செயலாளர் முருகன், மாநில குழு உறுப்பினர் மல்லிகா மற்றும் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய முஸ்லிம் லீக், ஆதிதமிழர் பேரவை, பெருந்தலைவர் மக்கள் கட்சி, ஆதிதமிழர் பேரவை கட்சி ஆகியவற்றை சேர்ந்த் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

    இதனை தொடர்ந்து எம்.எல்.ஏ.கீதாஜீவன் செய்தியாளர்களிடம் பேசுகையில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து மக்கள் தன்னெழுச்சியாக சுற்றுச்சுழல் மாசுபடுகிறது, காற்று, நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக போராடி வருகின்றனர். மக்களின் உணர்வுகளை திமுக மதிக்கிறது. மக்களின் உணர்வுகளை மதிப்பு அளித்து நிரந்தரமாக ஆலைய மூட வேண்டும் என்று திமுகவும் கோரிக்கை வைத்துள்ளது.எனவே மத்திய, மாநில அரசுகள் விரைந்து ஆலையை நிரந்தரமாக மூட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், அது தான் திமுகவின் நிலைப்பாடு என்றார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad