• சற்று முன்

    கோவில்பட்டி அருகேயுள்ள கழுகுமலை கழுகசாலமூர்த்தி திருக்கோவில் கொடியேற்றம்



    கோவில்பட்டி அருகேயுள்ள கழுகுமலையில் இருக்கும் புகழ்பெற்ற குடவரைகோவிலான கழுகசாலமூர்த்தி திருக்கோவில் பங்குனித்திருவிழா கொடியேற்றத்துடன் வெகுவிமரிசையாக தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். வரும் 29ந்தேதி திருத்தேரோட்டம் நடைபெறுகிறது.



    தென்மாவட்டத்தில் புகழ்பெற்ற குடவரை கோவில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கழுகுமலையில் இருக்கும் கழுகசாலமூர்த்தி திருக்கோவிலாகும், இக்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடைபெறும். 13நாள் நடைபெறும் இத்திருவிழா நடைபெறும். இந்தாண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 



    இதனை முன்னிட்டு அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு மூலவர் மற்றும் பரிவாரமூர்த்திகளுக்கு சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து மூலவர் சன்னத்திக்கு எதிரே அமைந்துள்ள கொடிமரத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவின் ஒவ்வொரு நாளும் கழுகசாலமூர்த்தி ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி ரத வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கவுள்ளார். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான திருத்தேரோட்டம் வரும் 29ந்தேதியும், திருக்கல்யாணம் வரும் 31ந்தேதியும் நடைபெறுகிறது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad