Header Ads

  • சற்று முன்

    பெண் வன்கொடுமை விழிப்புணர்வு மாராத்தான் ஓட்டம்



    பெண்கள் வன்கொடுமையில் இருந்து மீளவும், அவர்களை பாதுகாத்து கொள்வது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவதற்காக அமெரிக்க மற்றும் இந்தியாவை சேர்ந்த 8 பேர் கொண்ட குழுவினர் சென்னையில் இருந்து திருவனந்தபுரம் கோவாளம் வரையிலான 770 கிலோமீட்டர் தொலைவு மாராத்தான் ஓட்டத்தினை மேற்கொண்டுள்ளனர்.  கோவில்பட்டிக்கு வந்த அந்த குழுவினருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.



    இந்தியாவில் ஆண்டுதோறும் 20 ஆயிரம் பெண்கள் வன்கொடுமையினால் பாதிக்கப்படுவதாக ஐ.நா. புள்ளி விபரங்கள் தெரிவிப்பதாகவும், பெண்கள் மற்றும் பெண்குழந்தைகள் வன்கொடுமையில் இருந்து மீளவும், அவர்களை பாதுகாத்து கொள்வது குறித்தும், பெண் குழந்தை தொழிலாளர்கள் வருவதை தடுக்கும் வகையிலும் பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
    மேலும்  அமெரிக்கா ஸ்பரோ ஸ்கோப் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தினை சேர்ந்த ஜான், அவரது மனைவி சூசன் மற்றும் இந்தியாவை சேர்ந்த காட்ப்ரி, மெல்வின் உள்ளிட்ட 8 பேர் கொண்ட குழுவினர் பெண் வன்கொடுமை விழிப்புணர்வு மாராத்தான் ஓட்டத்தினை கடந்த 10ந்தேதி சென்னையில் தொடங்கினர்.சென்னை,விழுப்புரம், திருச்சி, மதுரை, விருதுநகர் வழியாக கோவில்பட்டிக்கு வந்த இந்த குழுவினருக்கு ரோட்டரி சங்கம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.



    தினந்தோறும் 50 கிலோ மீட்;டர் தூரம் மாராத்தன் ஓட்டத்தினை மேற்கொள்ளும் இந்த குழுவினர் வரும் 25ந்தேதி 770 கிலோமீட்டர் தூரம் கடந்த கேரளா மாநிலம் கோவாளத்தில் தங்கள் பயணத்தினை நிறைவு செய்கின்றனர். இந்த குழுவினர் செல்லும் வழியில் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று மாணவிகளிடம் வன்கொடுமைகளில் இருந்து தங்களை காப்பாற்றி கொள்வது குறித்தும், எதிர்ப்பது குறித்து ஆலோசனைகள் வழங்கி வருகின்றனர்.ஏற்கனவே இந்த குழுவினர் 2மில்லியன் ஸ்டேப்ஸ் ஸ்கோப் என்ற தலைப்பில் முதற்கட்டமாக சென்னையில் இருந்து மும்பைக்கு 1600 கி.மீ தொலைவை 36 நாட்கள் விழிப்புணர்வு மாராத்தான் ஓட்டத்தினை முடித்து, தற்போது தங்களது 2வது மாராத்தான் ஓட்டத்தினை தொடங்கி நிறைவு செய்யவுள்ளனர் என்பது குறிப்படதக்கது. 

    இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை இல்லை என்ற நிலை வரவேண்டும் என்பதே தங்களின் நோக்கம் என்று இந்த குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad