Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டி அருகே முத்துஸ்வாமி தீட்ஷிதரின் 244ஆவது ஜெயந்தி விழா – தொடர் இசை நிகழ்ச்சி 



    கோவில்பட்டி அருகே எட்டயபுரத்தில், சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான நாதஜோதி ஸ்ரீமுத்துஸ்வாமி தீட்ஷிதரின் 244ஆவது ஜெயந்தி விழா மற்றும் இசையஞ்சலி அவரது நினைவு மணிமண்டபத்தில் நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து இசைக்கலைஞர்கள் கலந்து தொடர் இசை நிகழ்ச்சி நடத்தினர்.



    தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே எட்டயபுரத்தில், சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான நாதஜோதி ஸ்ரீமுத்துஸ்வாமி தீட்ஷிதரின் நினைவு மண்டபம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் அவரது ஜெயந்தி விழா, இசையஞ்சலி விழாவாக வெகுசிறப்பாக நடைபெறுவது வழக்கம் முத்துஸ்வாமி தீட்ஷிதரின் 244ஆவது ஜெயந்தி விழா 2நாள்கள் நடைபெற்றது. நிறைவு நாளான இன்று தீட்ஷிதரின் நினைவு ஆலயத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு 18 வகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து, சக்திவேல் குழுவினரின் மங்கள இசையோடு நிகழ்ச்சி தொடங்கியது. பின்னர், இசைக் கலைஞர்கள் மற்றும் குழுவினர்கள் வீணைக் கச்சேரி, வயலின், பாட்டு, கீபோர்டு, மிருதங்கம், கடம், கஞ்சிரா, பக்கவாத்யங்கள் வாசித்தும், தீட்ஷிதரின் கீர்த்தனைகள், ஆலாபனைகளைப் பாடியும் இசை அஞ்சலி செலுத்தினர்.மதுரை தமிழ்நாடு இசைக் கல்லூரி முதல்வர் சுப்புலட்சுமி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினார். நிகழ்ச்சியில், சென்னை, திருநெல்வேலி, தஞ்சாவூர், நெய்வேலி உள்பட தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும், திருப்பதி, பெங்களுரு, ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்தும் இசைக் கலைஞர்கள், இசை ஆர்வலர்கள், சங்கீத வித்வான்கள் பங்கேற்றனர். வித்வான் எஸ். நவநீதன் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad