Header Ads

  • சற்று முன்

    யார் இந்த நடிகை ?


    ரேகா அவர்கள், ஹிந்தித் திரையுலகில் வெற்றிபெற்ற நடிகைகளுள் ஒருவராகப் போற்றப்படுபவர்.40 ஆண்டுகளில், 180 படங்களில் நடித்து, நான்கு ஃபிலிம்ஃபேர் விருதுகளையும், ஒரு தேசிய விருதினையும் வென்று, இன்றளவும் ஹிந்தித் திரையுலகில் நடித்து வரும் அவரின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகள் பற்றி மேலும் அறிய  தொடர்ந்து படிக்கவும்.

    ஆரம்பகால வாழ்க்கை
    அவரது இளமைப் பருவத்தில், அவரது தந்தை, அவரது தந்தைமையை ஒப்புக்கொள்ளாததாலும், நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தாலும், தனது பள்ளிப்படிப்பைப் பாதியிலே நிறுத்திவிட்டு, சினிமாவில் வாய்ப்புத் தேடி அலைந்தார். தமிழ் மற்றும் தெலுங்குப் பின்னணியில் இருந்து வந்திருந்தாலும், வீட்டில் தெலுங்குப் பேசியதால், அம்மொழியையே தாய்மொழியாகக் கொண்டார். அவர், ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் உருது ஆகிய மொழிகளை சரளமாகப் பேசும் வல்லமைப் பெற்றிருந்ததால், திரையுலகில் நுழைவதற்கு எளிதாக இருந்தது.

    தொழில்
    அவர், 1966ல், ‘ரங்குலா ரத்னம்’ என்ற தெலுங்கு படத்தில், பேபி பானுரேகாவாக அறிமுகமானார். 1969ல், ‘கோவா தள்ளி சி.ஐ.டி 999’ என்ற கன்னடப் படத்திலும், அதைத் தொடர்ந்து, அதே ஆண்டில் ‘அஞ்சனா ஸஃபர்’ என்ற ஹிந்தி படத்திலும் ஹீரோயினாக அறிமுகமானார்.



    விருதுகளும், அங்கீகாரங்களும்
    1982ல் உம்ராவ் ஜான் என்ற படத்திற்கான சிறந்த நடிகைக்காக ‘தேசிய விருது’ பெற்றார். நான்கு முறை ‘ஃபிலிம்ஃபேர் விருதுகளை’ 1981ல் ‘கூப்சூரத்’ என்ற படத்திற்காகவும், 1989ல் ‘கூன் பாரி மாங்க்’ என்ற படத்திற்காகவும், 1997ல் ‘கிலாடியோன் கா கில்லாடி’ என்ற படத்திற்காகவும், 2003ல் ‘வாழ்நாள் சாதனையாளர் விருதும்’ வென்றார். சர்வதேச விருதுகளான ‘சாம்சங் திவா விருதை’ 2003லும், ‘இந்திய சினிமாவின் ஒப்பற்ற சாதனைக்கான விருதினை’ 2012லும் பெற்றார். 2004ல் ‘கோயி மில் கயா’ என்ற படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான பாலிவுட் விருதினை வென்றார்.



    இல்லற வாழ்க்கை
    திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த போதே, அதாவது 1990ல், அவர் தில்லியைச் சார்ந்த தொழிலதிபர் முகேஷ் அகர்வால் என்பவரை மணமுடித்தார். அவர்களுக்குத் திருமணமாகி ஒரு வருடம் கழித்து, அவரது கணவர் தற்கொலை செய்து இறந்துவிட்டார். தற்போது, ரேகா அவர்கள், மும்பையில் பாந்த்ராவிலுள்ள அவரது இல்லத்தில் வசித்து வருகிறார்
    காதல் மன்னன் வாரிசு 
    1954: ‘காதல் மன்னன்’ ஜெமினி கணேசனுக்கும், தெலுங்கு நடிகை புஷ்பவள்ளிக்கும் அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி 1954 ஆம் ஆண்டில் பிறந்தார்.1966: ‘ரங்குலா ரத்னம்’ என்ற தெலுங்கு படத்தில், பேபி பானுரேகாவாக அறிமுகமானார்.
    1969: ‘கோவா தள்ளி சி.ஐ.டி 999’ என்ற கன்னடப் படத்திலும், அதைத் தொடர்ந்து, அதே ஆண்டில் ‘அஞ்சனா ஸஃபர்’ என்ற ஹிந்தி படத்திலும் ஹீரோயினாக அறிமுகமானார்.
    1982ல் உம்ராவ் ஜான் என்ற படத்திற்கான சிறந்த நடிகைக்காக ‘தேசிய விருது’ பெற்றார்.
    1990: தில்லியைச் சார்ந்த தொழிலதிபர் முகேஷ் அகர்வால் என்பவரை மணமுடித்தார்.
    1991: அவரது கணவர் மரணமடைந்தார்.
    2004: ‘கோயி மில் கயா’ என்ற படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான பாலிவுட் விருதினை வென்றார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad