• சற்று முன்

    வங்கி கொள்ளையில் ஈடுப்பட்ட இருவர் சென்னையில் கைது.



    சென்னை விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் கடந்த திங்கட்கிழமையன்று லாக்கர்கள் உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டன. லாக்கர் அறையின் இரும்புக் கதவை கேஸ்வெல்டிங் வைத்து துளையிட்ட கொள்ளையர்கள், லாக்கர்களையும் வெல்டிங் வைத்து உடைத்தனர்.

    கேஸ் தீர்ந்து விட்டதால், இரு லாக்கர்களை மட்டும் உடைத்து அதிலிருந்த சுமார் 100 சவரன் நகைகளை எடுத்துக் கொண்டு தப்பி ஓடினர். வங்கியின் காவலாளியாக வேலை பார்த்த நேபாளத்தைச் சேர்ந்த சபிலால் சந்த் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொள்ளையை அரங்கேற்றியிருப்பதை விசாரணையில் கண்டறிந்த போலீஸார், அவர்களைப் பிடிக்க 7 தனிப்படை அமைத்தனர். நேபாளத்திற்கு சென்ற தனிப்படையினர், குற்றவாளிகளை கைது செய்வதற்காக இண்டர்போல் உதவியை நாடினர்.


    இதனையடுத்து சபிலால் சந்தை இண்டர்போல் காவல்துறையினர் கைது செய்தனர். சர்வதேச நடைமுறைகளை பின்பற்றி சபிலால் தமிழகம் அழைத்து வரப்படுவான் என போலீஸார் தெரிவித்துள்ளனர். 

    இதனிடையே, சபிலால் சந்த் உடன் சேர்ந்து வங்கியில் கொள்ளையடித்த கூட்டாளிகள் பகதூர், பிரதாப் ஆகிய இருவரும் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர். பெங்களூரில் கால் டாக்சி ஓட்டி வந்த இருவரும், காவலாளிகளாகவும் வேலைபார்த்து வந்துள்ளனர். மேலும் 3 பேருடன் காரில் சென்னை வந்து, சபிலால் சந்த் உடன் சேர்ந்து ஐஓபி கிளையில் கொள்ளையடித்துள்ளனர்.



    பிறகு 6 பேரும் பெங்களூரு தப்பிச் சென்றுள்ளனர். அங்கிருந்து சபிலால் சந்த் விமானத்தின் மூலம் நேபாளம் சென்றுவிட, மேலும் மூவர் ரயில் ஏறி வேறொரு ஊருக்குச் சென்றுவிட்டனர். பெங்களூரிலேயே வழக்கம்போல கால்டாக்சி ஓட்டி வந்த பகதூர், பிரதாப்பை தனிப்படை போலீசார் பிடித்து விசாரித்த போது கொள்ளை அடித்ததை ஒப்புக் கொண்டனர். பெங்களூரில் இருந்து நேற்று முன்தினம் சென்னை கொண்டுவரப்பட்ட பகதூர், பிரதாப்பிடம் விசாரணை முடிந்த பிறகு, அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad