திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா : எட்டயபுரத்தில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு
எட்டயபுரத்தில் திமுக 1 வது வார்டு இளைஞர் அணி சார்பில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைப்பெற்றது.
திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் சேலை மற்றும் வேஷ்டி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இதற்கு விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் லெனின் தலைமை தாங்கினர். 1வது வார்டு இளைஞர் அணி உறுப்பினர்கள் முரட்டுகாளை மற்றும் மைக்கேல் அமுல்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தம்பிராஜன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில் திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஜெகன்பெரியசாமி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
கோவில்பட்டி திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதகண்ணன், புதூர் ஒன்றிய செயலாளர் ராதகிருஷ்ணன் மற்றும் திமுக மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் பிரதீப், எட்டயபுரம் நகரச் செயலாளர் பாரதிகணேசன் மற்றும் ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் ராமமூர்த்தி 1வது வார்டு திமுக செயலாளர் தேவகிருபை ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்கள்..
இதில் கலந்து கொண்டவர்கள் நெசவாளர் அணி அமைப்பாளர் பிச்சை, மாணவரணி நகர துணை அமைப்பாளர் மயில்ராஜ் , விவசாய அணி கோமதிசங்கர் , திமுக 1வது வார்டு நிர்வாகிகள் சுடலைமுத்து, ஜெயபால், செந்தில்குமார், செல்வக்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர். விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு திமுக 1 வது வார்டு இளைஞர் அணி பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை