Header Ads

  • சற்று முன்

    நூதன முறையில் நீர் தொட்டிக்கு அஸ்திவாரம் - பொது மக்கள் கொந்தளிப்பு



    கோவில்பட்டியில் சாக்கடை கழிவுகளை கொண்டு மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சாலைமறியல்

    கோவில்பட்டியில் 2வது குடிநீர் திட்டப்பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகிறது. இதற்காக நகரில் பல்வேறு இடங்களில் மேல்நிலைகுடிநீர் தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணியின் ஒரு பகுதியாக நடராஜபுரம் தெரு பழைய ஆட்டு சந்தை பகுதியிலும் மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி அஸ்திவாரம் சாக்கடை கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் ஆகியவற்றை கொண்டு  அமைக்கப்பட்டு வருவதாகவும், மேலும் இங்கு தோண்டப்பட்ட மண்ணை விற்பனை செய்துவிட்டதாகவும், அஸ்திவார பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் , ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட செயலாளர் தமிழரசன், அண்ணா தொழிற்சங்க நிர்வாகி ராமகிருஷ்ணன், ஐ.என்.டியூ.சி ராஜசேகர், மாமன்னர் புலித்தேவர் மக்கள் நல இயக்க நிறுவனர் செல்வம் மற்றும் நிர்வாகிகள் கோவில்பட்டி - இளையரசனேந்தல் சாலையில் தீடீரென சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து தாசில்தார் ஜான்சன்தேவசகாயம் மற்றும் நகராட்சி அதிகாரிகள், காவல்துறையினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டுவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தினை கைவிட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மக்களின் போராட்டத்தினை தொடர்ந்த சாக்கடை கழிவுகள் அகற்றும் பணியும் தொடங்கியது. கோவில்பட்டி நகரில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் 2வது குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது, இதே போன்று சாக்கடை கழிவுகளை கொண்டு கட்டப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகம் எழுவதால் அவற்றையும் ஆய்வு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad