உலக வன நாள் - விழிப்புணர்வு கடிதம் எழுதிய பள்ளி மாணவர்கள்
தமிழ்நாடு அரசு வனத்துறை, கோவில்பட்டி நாடார் நடுநிலைப்பள்ளி தேசிய பசுமைப்படை சார்பில் உலக வனநாள் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. ஆண்டுதோறும் மார்ச் 21ம்தேதி உலகவனநாள் கடைப்பிடிக்கப்படுகிறது.நாடார் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் 963 பேர் அதிக மரக்கன்றுகளை நட்டு காடு வளர்ப்பை அதிகப்படுத்தவும் காடுகளில் ஏற்படும் தீ விபத்துகளை தடுத்து நிறுத்தவும் வன உயிரினங்களுக்கு எதிரான செயல்களை தடுத்து நிறுத்தவும், வனங்களையும், வன உயிரினங்களையும் பாதுகாக்கவும் உறுதிமொழி எடுத்துக் கொண்டு விழிப்புணர்வு பதாகையில் கையொப்பம் இட்டும் தனது உறவினர்களுக்கு அஞ்சல் அட்டையில் எழுதி அஞ்சல் பெட்டியில் போட்டனர்.மாணவர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும், மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது.
இவ்விழாவிற்கு நாடார் உறவின் முறைச் சங்கச் செயலாளர் ஜெயபாலன் தலைமை வகித்தார்.நாடார் நடுநிலைப்பள்ளி செயலாளர் கண்ணன், பொருளாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தேசிய பசுமைப்படை தேசிய நல்லாசிரியர் குமுதம் அனைவரையும் வரவேற்றார்.கோவில்பட்டி வனச்சரகர் சிவராம் கலந்து கொண்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம், மரக்கன்றுகளை வழங்கி பேசினார்.
விழாவில் நாடார் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியை செல்வி, அஞ்சல்துறை வணிக அலுவலர் ரெங்கசாமி, சமூக ஆர்வலர் முத்துமுருகன், பள்ளி நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மணிக்கொடி, ராஜாஅமரேந்திரன், பொன்ராமலிங்கம், ரவிச்சந்திரன், பள்ளி ஆசிரியர் அருள்காந்தராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் பள்ளி ஆசிரியர் ஜெபஅகிலா நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை