Header Ads

  • சற்று முன்

    70வது மடாதிபதியாக விஜயேந்திரர் நியமிக்கப்படுவாரா ?



    காஞ்சிபுரம்: ஜெயேந்திரர் மறைவையடுத்து காஞ்சி சங்கர மடத்தின் 70வது மடாதிபதியாக விஜயேந்திரர் தனது பொறுப்பை தொடங்கியுள்ளார். காஞ்சி மடத்தின் 69வது மடாதிபதியாக இருந்த ஜெயேந்திரர் கடந்த பிப்ரவரி 28ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இதனையடுத்து இளைய மடாதிபதியாக இருக்கும் விஜயேந்திரர் 70வது மடாதிபதியாக நியமிக்கப்படுவார் என பேசப்பட்டு வந்தது.

    lஜெயேந்திரர் மறைவையடுத்து காஞ்சி சங்கர மடத்தின் 70வது மடாதிபதியாக விஜயேந்திரர் நியமிக்கப்பட்டுள்ளார். சங்கர மடத்தின் அனைத்து நிர்வாக பொறுப்பையும் அவர் கவனிக்கத் தொடங்கியுள்ளதாக சுந்தரேச ஐயர் கூறியுள்ளார். மறைந்த சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் படம் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும் என்றும் 13 ஆம் சிறப்பு பூஜைகளை விஜயேந்திரர் செய்வார் என்றும் அவர் கூறினார். 13 நாட்கள் காரியங்கள், சடங்குகள் முடிந்த உடன் முறைப்படி விஜயேந்திரர் 70வது பீடாதிபதியாக நியமனம் செய்யப்படுவார். விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு தற்போது 49 வயதாகிறது. இவரது இயற்பெயர் சங்கர நாராயணன். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தண்டலம் எனும் கிராமத்தில் இவர் 1969ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13ஆம்தேதி பிறந்தார். 14 வயதிலேயே மடத்துக்கு வந்து விட்டதால் சங்கர மடத்தின் அனைத்துப் பணிகளிலும் இவருக்கு அதிகமான அனுபவம் உள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad