தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.-உமாமகேஸ்வரி பேச்சு
தமிழக அமைச்சரவையில் புதிய துறை வேஷ்டி உருவல் துறை - தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.-உமாமகேஸ்வரி பேச்சு
கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் திடலில் அதிமுக (அம்மா) அணி சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் தகுதி நீக்கம் செய்யபட்ட விளாத்திகுளம் தொகுதி உமா மகேஷ்வரி பேசுகையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வழியில் நடைபெறும் ஆட்சி என்று கூறும் தற்போதைய ஆட்சியாளர்கள் அவர் கொண்டு வந்த எந்த திட்டங்களையும் நிறைவேற்றவில்லை,தூத்துக்குடி மாவட்டத்தில் அமைச்சர் விவசாயிகளுக்கு பயிர்காப்பீட்டு தொகை வாங்கி தரமால் ஆடம்பர திருமணம் நடத்துகிறார்.தமிழகத்தில் இன்று புதிய அமைச்சராக தொழில்நுட்ப துறை அமைச்சரை வேஷ்டி உருவல் துறை அமைச்சராக நியமனம் செய்துள்ளனர்.டி.டி.வி.தினகரனுக்கு மக்கள் செல்வாக்கு உள்ளது, அவர் விரைவில் முதல்வராக பொறுப்பு ஏற்பார்.அதற்கு உதாரணம் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஒரு உதாரணம்; என்றார்.
கருத்துகள் இல்லை