Header Ads

 • சற்று முன்

  தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ திறந்து வைத்தார்.

  கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் திருக்கோவில் அருகே காயத்திரி திருமணமண்டபத்தில், செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. இந்த கண்காட்சியை தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ திறந்து வைத்து பார்வையிட்டார். இதனை தொடர்ந்து, அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ அம்மா வழியில் நல்லாட்சி அதற்கு, ஒராண்டு சாதனையே சாட்சி என்ற தூத்துக்குடி மாவட்டத்தின் சாதனை மலரினை கோவில்பட்டி கோட்டாச்சியர் அனிதாவிடம் வழங்கினார். பின்னர் தமிழ்நாடு அரசின் ஒராண்டு சாதனை குறித்த குறும்படங்கள், கிராமங்களில் திரையிட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு விளம்பர வகானத்தினை கொடியசைத்து துவக்கி வைத்து பார்வையிட்டு, "அம்மா வழியில் நல்லாட்சி அதற்கு ஒராண்டு சாதனையே சாட்சி" என்ற ஒட்டு வில்லையினை வாகனங்களில் ஒட்டினார். 

  தொடர்ந்து. கோவில்பட்டி காயத்ரி திருமண மண்டபத்தில், பொது சுகாதாரத்துறையின் மூலம் நடைபெற்ற  தாய் - சேய் நல சிறப்பு மருத்துவ முகாமினை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, முகாமினை பார்வையிட்டு, கர்ப்பிணி பெண்களுக்கான தடுப்பூசி அட்டவணையினை கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கினார்.  இந்நகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் பி.டி.ஆர்.ராஜகோபால், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன், கோவில்பட்டி கோட்டாச்சியர் அனிதா, ராஜா, நகராட்சி ஆணையர் அட்சய்யா, கோவில்பட்டி துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மருத்துவர் போஸ்கோ ராஜா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவாஸ்கான், வட்டாட்சியர் ஜாண்சன் தேவசகாயம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

  இதனை தொடர்ந்து கோவில்பட்டி அண்ணா பஸ்நிலையம் முன்பு அதிமுக சார்பில் அமைக்கப்பட்டு இருந்த நீர்,மோர் பந்தலை தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ திறந்து வைத்து சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன், அதிமுக நகர செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரைபாண்டியன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

  பின்னர் அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ செய்தியாளர்களிடம் பேசுகையில் பா.ஜ.க ஆட்சி பிடிக்கும் என்று  தமிழிசை கூறுவதுஅது வேடிக்கை தான் - கட்சியை வைத்திருப்பவர்கள் எல்லோரும், ஆட்சியை பிடிக்கும் என்று கூற எல்லோருக்கும் உரிமை உண்டு,காவிரிமேலாண்மை தொடர்பாக முதல்வரும், துணை முதல்வரும் சட்டமன்றத்தில் விரிவாக கூறியுள்ளனர். இன்னும் 5 நாள்கள் உள்ளது, இந்த பிரச்சினைக்காக அதிமுக எம்.பிகள் 14நாள்கள் நாடாளுமன்றத்தினை முடங்கியுள்ளனர். நிச்சயமாக தமிழகத்திற்கு நல்ல தீர்வு வரும், அது வரை அந்த பணியை தமிழக அரசு செய்யும், திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் எதிர்கட்சி தலைவராக இருப்பதற்கு கூட தகுதியில்லை, அருகதையில்லை. ஆளும் கட்சி அரசின் சாதனைகளை கொண்டாடடும், எதிர்கட்சியா கொண்டாட முடியும்,கனவு முதல்வராக மு.க.ஸ்டாலின் உள்ளார், ஜெயலலிதா மறைந்தவுடன் இந்த ஆட்சி நீடிக்காது என்று கனவு கண்டார். ஆனால் அதையும் தாண்டி இந்த அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் குறித்து மாவட்ட நிர்வாகத்துடன் கலந்து பேசி அரசு கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அதிமுக தயக்கம் காட்டியது கிடையாது, திமுக தான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது, சின்னம் இல்லமால் இருந்த போதும், இருக்கும் போதும் தேர்தலை கண்டு பயந்தது கிடையாது, கூட்டுறவு சங்க தேர்தலும் நடைபெறவுள்ளது. எந்த தேர்தலை பற்றியும், பயப்படாத கவலை கொள்ளாத இயக்கம் அதிமுக, கோவில்பட்டியில் செவிலியர் பயிற்சி கல்லூரி அமைக்க 18  கோடி ரூபாய் அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், பிரதமர் நிகழ்ச்சி உள்ளிட்ட சில காரணங்களால் கோவில்பட்டி 2வது குடிநீர் திட்டம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவருவதில் காலதாமதம் ஏற்பட்டதாகவும், அடுத்த மாதம் 11ந்தேதி 2வது குடிநீர் திட்டத்தினை முதல்வர் மக்கள் பயன்பாட்டிற்க்கு அர்பணித்து வைக்கவுள்ளதாக தெரிவித்தார்.

  கருத்துகள் இல்லை

  Post Top Ad

  Post Bottom Ad