Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டியில் 1330 திறக்குறளை சொல்லி அசத்திய அரசு பள்ளி மாணவி



    கோவில்பட்டி எட்டயபுரம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மகிழ்வோர் மன்றம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுப்பையாபுரத்தினை சேர்ந்த அரசு பள்ளியில் பயிலும் 8ம் வகுப்பு மாணவி பிருந்தாலெட்சுமி என்பவர் 1330 திறக்குறளை எப்படி கேட்டலும், தன்னுடைய நினைவாற்றலால் சொல்லி அசத்தினார்.



    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள மகிழ்வோர் மன்றம் சார்பில் மாதந்தோறும், இளம் சிறார்கள், பள்ளி மாணவ-மாணவிகளில் கலை திறன், தனித்திறன் ஆகியவற்ற வெளிகொண்டுவருவதற்கான சிறப்பு நிகழ்ச்சி நடத்தி வருகிறது. அதேப்போன்று இந்த மாதத்திற்கான சிறப்பு நிகழ்ச்சி எட்டயபுரம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சுப்பையாபுரம் அரசு பள்ளியைச்சேர்ந்த பிருந்தாலெட்சுமி என்ற 8ம் வகுப்பு பயிலும் மாணவி 1330 திறக்குறளை, அதிகாரம் பெயரை சொல்லியோ அல்லது திறக்குறள் வரிசை எண் சொன்னலும், தன்னுடைய நினைவாற்றல் மற்றும் பயிற்சியின் காரணமாக அந்த திருக்குறளை சொல்லி அசத்தினார்.


    நிகழ்ச்சிக்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பொதுமக்கள் கேட்ட அத்தனை திருக்குறளை சிறப்பாக சொல்லி அசத்தினார். சிறப்பாக திருக்குறளை சொல்லிய மாணவி பிருந்தாலெட்சுமிக்கு சிறப்பு விருந்தினர் முனைவர் பர்வீன் சுல்தானா பரிசு வழங்கி பாராட்டினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் சிறுமிகள் நகைச்சுவை, பாடல்கள் பாடி அனைவரின் கவனத்தினையும் ஈர்த்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad