கோவில்பட்டியில் குருத்தோலை ஞாயிறு பவனி – 1000க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ மக்கள் பங்கேற்பு
கோவில்பட்டியில் கிறஸ்துவமக்களின் தவக்கால நிகழ்வுகளில் முக்கிய நிகழ்வான குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது.இதில் ஆர்.சி, சிஸ்.எஸ்.ஐ. தேவலாயங்களை சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட கிறிஸ்துவ மக்கள் கிறஸ்து பாடல்களை பாடிய குருத்தோலை ஏந்தி பவனியில் கலந்து கொண்டனர்
இயேசுவின் சிலுவைப்பாடுகளை தியானிக்கும் வகையில் ஆண்டுதோறும் 40நாள்கள் கிறிஸ்துமக்களால் தவக்காலம் அனுசரிக்கப்படுகிறது,இந்த தவக்கால நிகழ்வுகளில் முக்கியமான ஒன்று குருத்தோலை ஞாயிறு பவனி.ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்துவ ஆலயங்களில் நடத்தப்படுவது வழக்கம், இந்தாண்டுக்கான தவக்காலம் கடந்த மாதம் 14ந்தேதி தொடங்கியது.முக்கிய நிகழ்வான குருத்தோலை ஞாயிறு பவனி இன்று நடைபெற்றது.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள ஆர்.சி. மற்றும் சி.எஸ்.ஐ. தேவலாயங்கள் இணைந்து குருத்தோலை ஞாயிறு பவனி மேற்கொண்டனர். ஆர்.சி. தேவலாயம் முன்பு தொடங்கிய குருத்தோலை ஞாயிறு பவனியை ஆர்.சி. பங்குதந்தை பீற்றர் அடிகளார், சி.எஸ்.ஐ.ஆலய தலைமை குரு ஆசிர்; ஜோசப் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பவனி மெயின்ரோடு, புதுரோடு, ஆழ்வார் தெரு, மில்தெரு, ரெயில்வே நிலையம் வழியாக சென்று சி.எஸ்.ஐ. தேவலாயத்தில் முடிவு பெற்றது. இதில் 1000க்கும் மேற்பட்ட கிறஸ்துவமக்கள் குருத்தோலையுடன் ஓசன்னா மற்றும் கிஸ்துவ பாடல்களை பாடிய படி கலந்து கொண்டனர்
கருத்துகள் இல்லை