அ.தி.மு.க.வில் இருந்து தஞ்சை வடக்கு மாவட்ட தினகரன் ஆதரவாளர்கள் 150 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
அ.தி.மு.க.வில் இருந்து தஞ்சை வடக்கு மாவட்ட தினகரன் ஆதரவாளர்கள் 150 பேர் நீக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கழகத்தின் கொள்கை- குறிக்கோள்களுக்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதால் தஞ்சாவூர் வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த அவை தலைவர் ஜோதி மற்றும் நிர்வாகிகள், அன்னபூரணி, ராஜேஸ்வரி, நாகராஜன், ரெஜியா பேகம் சாலிபு, சிங்காரவேலு, கார்த்திகேயன், பரணி, குரு மூர்த்தி மற்றும் நிர்வாகிகள்.
இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது.
கருத்துகள் இல்லை