Header Ads

  • சற்று முன்

    ஏன் தரையில் கைகளை ஊன்றி சாப்பிடக்கூடாது-ன்னு சொல்றாங்க தெரியுமா?


    உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு உண்ணும் உணவுகள் மட்டுமின்றி, உண்ணும் போது மேற்கொள்ளும் சில பழக்கவழக்கங்களும் முக்கிய பங்கை வகிக்கிறது. பொதுவாக சாப்பிடும் போது, இப்படி தான் சாப்பிட வேண்டுமென்ற விதிமுறைகளை நம் முன்னோர்கள் கொண்டிருப்பார்கள். இந்த விதிமுறைகளை நாமும் தவறாமல் பின்பற்றி வருவோம். இந்த விதிமுறைகள் ஒவ்வொன்றிற்கும் பின்னணியில் காரணங்கள் நிச்சயம் ஒளிந்து கொண்டிருக்கின்றன. எந்த ஒரு காரணமும் இல்லாமல் நம் முன்னோர்கள் சாப்பிடுவதற்கு என்று விதிமுறைகளை விதித்திருக்கமாட்டார்கள். இன்றைய காலத்தில் பலரும் நாம் பின்பற்றும் பழக்கங்களுக்கான காரணம் என்னவென்று தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளார்கள். அதில் சாப்பிடும் போது மேற்கொள்ளக்கூடாத சில பழக்கங்களுக்கான காரணங்கள் குறிப்பிடத்தக்கவை. இக்கட்டுரையில் ஒருவர் சாப்பிடும் போது மேற்கொள்ளக்கூடாத சில பழக்கங்களும், மேற்கொள்ள வேண்டிய சில பழக்கங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைக் கொஞ்சம் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

    சாப்பிடும் போது தண்ணீரை அதிகம் குடிக்கக்கூடாது என்று கூறுவார்கள். அப்படி குடித்தால், தாகத்திற்கு சிறிது குடிக்கலாம். அதிகம் குடித்தால் உணவை செரிக்க உதவும் அமிலத்தின் திறன் குறைந்து, உணவுகள் சரியாக செரிமானமாகாமல் போகும். வேண்டுமானால் உணவு உண்பதற்கு 30 நிமிடத்திற்கு முன் மற்றும் உணவு உட்கொண்ட 30 நிமிடத்திற்கு பின் வேண்டிய அளவு தண்ணீரைக் குடிக்கலாம்.


    உணவை உட்கொள்ளும் போது தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டோ, மொபைல் போன் அல்லது டிவி ரிமோட்டைப் பயன்படுத்திக் கொண்டோ சாப்பிடக்கூடாது. இதனால் உண்ணும் உணவில் கவனத்தை செலுத்த முடியாமல் போவதோடு, அவைகளில் ஏராளமான கிருமிகளும் இருக்கும். இதனால் உடல் உபாதைகளுக்கு உள்ளாகக்கூடும்.

    முக்கியமாக சாப்பிடும் போது கைகளை தரையில் ஊன்றி சாப்பிடக்கூடாது, அப்படி சாப்பிட்டால் உண்ணும் உணவு உடலில் ஒட்டாது என்று கூறுவார்கள். இதற்கு காரணம் சாப்பிடும் போது கைகளை ஊன்றி சாப்பிடும் போது, வயிறு சுருங்கி விரைவில் வயிறு நிரம்பியது போன்று இருக்கும். ஆனால் விரைவில் பசி எடுத்துவிடும். இதன் விளைவாக உடல் பருமன் அடையக்கூடும்.

    உணவை உண்ணும் போது அவசர அவசரமாக சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். மாறாக மெதுவாக நன்கு மென்று விழுங்க வேண்டும். இதனால் உண்ணும் உணவுகள் எளிதில் செரிமானமாகிவிடும் மற்றும் உணவில் உள்ள அனைத்து சத்துக்களும் கிடைக்கும். அதை விட்டு வேகமாக சாப்பிட்டால், காற்றை சேர்த்து விழுங்கி, வாய்வுத் தொல்லையால் அவஸ்தைப்படக்கூடும்.
    காலை உணவை எழுந்த ஒரு மணிநேரத்திற்குள்ளேயே சாப்பிட வேண்டும். ஒரு நாளில் நீண்ட நேரம் சாப்பிடாமல் இருப்பது இரவு நேரத்திற்கும்-காலை நேரத்திற்கும் இடையிலான வேளையில் தான். அதேப் போல் இரவு நேரத்தில் தூங்குவதற்கு 2 மணிநேரத்திற்கு முன்பே சாப்பிட்டு விட வேண்டும்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad