Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டியில் பயிர்காப்பீட்டு தொகை வழங்க கோரி விவசாயிகள் சாலை மறியல் -முன்னாள் எம்.எல்.ஏக்கள் உள்பட 197 பேர்கைது



    விவசாயிகளுக்கு 2016-17ம் ஆண்டுகளுக்கான பயிர்காப்பீட்டு தொகையினை வழங்க வேண்டும், காலதாமதம் செய்து வரும் இன்சூரன்ஸ் கம்பெனி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும், மேலும் பயிர்காப்பீட்டில் முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கோவில்பட்டி அண்ணாபஸ் நிலையம் முன்பு சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளா நல்லையா தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏக்கள் அய்யலுசாமி, ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் துரைமாணிக்கம், அனைந்திந்திய இளைஞர் பெருமன்ற மாநில செயலாளர் ஆகியோர் கண்டன உரையாற்றினர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் தமிழரசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க தாலூகா தலைவர்கள் ரெங்கசாமி, கிருஷ்ண மூர்த்தி, லெனின்குமார், சுப்பையா, கிருஷ்ண மூர்த்தி, மாரிச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 33பெண்கள் உள்பட 197 மேற்பட்டவர்களை போலீசார்கைது செய்தனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad