ராமநாதபுரம் சுகாதார அலுவலகத்தின் அவலம்
ராமநாதபுரம் சுகாதார அலுவலகம் மக்களுக்கு முன் உதரணமாக இருக்கவேண்டிய சுகாதார துறை. மக்களுக்கெல்லாம் விழிப்புணர்வு செய்ய வேண்டியது. ஆனால் இவர்களுக்கு யார் விழிப்புணர்வு செய்வது.
இராமநாதபுரம் மாவட்ட சுகாதார துறை அலுவலக வாசலில் குப்பைகள்
இராமநாதபுரம் மாவட்ட சுகாதார துறை அலுவலக வாசலில் குப்பைகளை தினந்தோறும் எடுக்கப்படாமலும் முறையான குப்பைத்தொட்டி இல்லாததாலும் குப்பைகள் ரோட்டில் சிதறிக்கிடக்கிறது.குப்பைகளை அப்பகுதி மாடுகள் கிளறி கெட்டுப்போன உணவுகளையும் அதனுடன் உள்ள பிளாஸ்டிக் பைகளையும் தின்னுகின்றன. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் அடிக்கிறது அவ்வழியே செல்லும் பொதுமக்கள் மூக்கை பொத்தியபடியே செல்கின்றனர். மேலும் பிளாஸ்டிக் பைகளை மாடுகள் திண்பதால் அவை மாடுகளின் குடலில் சிக்கி இறக்கும் அபாயம் உள்ளது. உடனடியாக நகராட்சி நிர்வாகம் அப்பகுதியில் குப்பைகளை கொட்டுவதற்கு குப்பைத்தொட்டியும், குப்பைகளை தினந்தோறும் அள்ளவும் நடவடிக்கைகள் தேவை என தெரிவித்தனர்
கருத்துகள் இல்லை