• சற்று முன்

    கோவில்பட்டி நாடார் பாலர் பள்ளியில் மாறுவேட போட்டி


    கோவில்பட்டி நாடார் பாலர் பள்ளியில்  மாறுவேட போட்டி நடைபெற்றது.  இந்நிகழ்ச்சிக்கு நாடார் உறவின்முறை சங்க செயலாளர் எஸ்.ஆர்.ஜெயபாலன் தலைமை வகித்தார். நாடார் நடுநிலைப்பள்ளி செயலாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். நாடார் பாலர்பள்ளி தலைமையாசிரியை அனிதா செல்வி அனைவரையும் வரவேற்றார். பள்ளி எல்கேஜி, யுகேஜி;; மாணவர்கள் நேரு, பாரதியார், சரஸ்வதி, ஒளவையார், காமராஜர் போன்ற தேசத்தலைவர்கள் மற்றும் கடவுள்கள் வேடம் புனைந்து மாறுவேட போட்டியில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மாறுவேட போட்டியில் ஜெய்சரண், அந்தோணி பிரின்ஸ், சஞ்சய் சிதம்பரம், நந்தினி, கார்த்திகை லட்சுமி, பேச்சியம்மாள், ராஜேஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாறுவேட போட்டி நடுவர்களாக மலர்கொடி, மாலாதேவி, சீனியம்மாள் ஆகியோர் பணிபுரிந்தனர். இந்நிகழ்ச்சியில் நாடார் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியை செல்வி, பாரதியார் நினைவு அறக்கட்டளை தலைவர் முத்துமுருகன், நாடார் நடுநிலைப்பள்ளி நிர்வாக குழு உறுப்பினர் ராஜா அமரேந்திரன், நாடார் பாலர்பள்ளி ஆசிரியர்கள் சுமதி, கற்பகமணி, மலர்கொடி, கிரேஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர் அனிதா நன்றி கூறினார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad