Header Ads

  • சற்று முன்

    சென்னையில் மீண்டும் ஆசிட் கலாச்சாரம் அரங்கேறியது

    சென்னை மடிப்பாக்கம் அருகே வாணுவம்பேட்டையில் ஸ்ரீ பாலாஜி ரத்தப் பரிசோதனை மையம் என்ற தனியார் ரத்தப் பரிசோதனை நிலையம் உள்ளது. இந்த ரத்தப் பரிசோதனை மையத்தில் 30 வயது யமுனா என்ற பெண் செவிலியராகப் பணியாற்றி வந்தார். கடந்த பிப்ரவரி 18ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று ரத்தப்பரிசோதனை மைய உரிமையாளர் ராஜா யமுனாவை பணிக்கு வருமாறு அழைத்துள்ளார்.
    ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமாக இருந்தாலும் யமுனா உரிமையாளரின் பேச்சை தட்டமுடியாமல் பணிக்கு வந்துள்ளார். பிற்பகல் 1 மணியளவில் ரத்த பரிசோதனை மையத்தில் இருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

    தீக்காயங்களுடன் துடித்த யமுனா 
    அப்போது யமுனா தீப்பற்றிய நிலையில் துடிதுடித்துக் கதறி கொண்டிருந்துள்ளார். 46 சதவீத தீக்காயங்களுடன் யமுனா சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்
    ஸ்பிரிட் வீசி தீ வைப்பு 
    இந்த சம்பவம் குறித்து மடிப்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் யமுனாவை தவறான நோக்கத்தில் ராஜா அணுகியது தெரிய வந்தது. ராஜாவின் ஆசைக்கு யமுனா இணங்க மறுத்ததால் அவர் மீது ரத்தப் பரிசோதனை மையத்தில் உள்ள எரியும் நிலையில் உள்ள திரவத்தை ராஜா ஊற்றியுள்ளார். இதனைத் தொடர்ந்து தீ வைத்து எரித்துள்ளார்.

    பணி இடத்தில் நேர்ந்த கொடுமை 
    தனது குடும்ப சூழ்நிலை காரணமாக ரத்தப் பரிசோதனை மையத்தில் பணிக்கு சேர்ந்த யமுனாவிடம் தவறான நோக்கத்தில் அணுகியதோடு அவரை கொல்லவும் துணிந்துள்ளார் ராஜா. பணிக்கு செல்லும் இடத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு எந்த அளவில் இருக்கிறது என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது.



    பரிதவிக்கும் 4 வயது பெண் குழந்தை 
    காதலித்து திருமணம் செய்த யமுனா, கணவர் மற்றும் 4 வயது பெண்குழந்தையுடன் வசித்து வந்தார். யமுனா உயிரிழந்ததால் அவரது 4 வயது மகளும் கணவரும் நிராதரவான நிலையில் மருத்துவமனையில் கண்ணீர் வடித்தபடி நின்றது மருத்துவமனை ஊழியர்களையே கலங்க வைத்தது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad