இராமநாதபுரம் நகராட்சியின் மெத்தன போக்கு
இராமநாதபுரம் வண்டிக்காரதெரு நகைகடை பஜார் இணையும் சாலையில் காவேரி கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு.
இராமநாதபுரத்தில் போக்குவரத்து மிகுந்த சாலையான வண்டிக்காரத்தெருவில் காவேரி கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் விணாகிவருகிறது. குழாய் உடைந்த பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சாலையை செல்லும் வாகனங்கள், நடந்து செல்பவர் குழியில் விழுந்து. விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதே இடத்தில் பலமுறை உடைப்பு ஏற்பட்டும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறையாக சரிசெய்யாத காரணத்தால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட இடத்தில் பாதுகாப்பிற்காக மரச்செடிகளையும், கம்புகளையும் நிறுத்தி வைத்துள்ளனர்.
மாண்புமிகு அமைச்சர் அவர்களின் இல்லமும், நகராட்சி அலுவலகமும் உள்ள மிகவும் பரபரப்பான இந்த சாலையில் ஒரே இடத்தில் பலமுறை உடைப்பு ஏற்பட்டும் அதிகாரிகள் ஒழுங்காக சரி செய்யவில்லை என அப்பகுதியில் மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்
கருத்துகள் இல்லை