திருவண்ணாமலையில் அதிமுக தொண்டர்கள் மற்றும் காவலர்களுடன் தள்ளுமுள்ளு !!!
திருவண்ணாமலை ரவுண்டானா அருகில் நிறுவப்பட்ட எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளை காவல் துறையினர் அகற்றப் போவதாக வந்த தகவலை அடுத்து, அங்கு விரைந்து சென்ற அதிமுகவினர் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து அங்கு வந்த காவல்துறையினர் 3 மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தியும் கலைந்து செல்லாததால், அவர்களை கைது செய்ய முற்பட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் குண்டு கட்டாக இழுத்து சென்று அவர்களைக் கைது செய்தனர்.
ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர். சிலைகளை காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் ஜே.சி.பி இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர்.
இதனிடையே, ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகில் அனுமதியின்றி வைக்கப்பட்ட எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் வெண்கல சிலைகள் நேற்று அகற்றப்பட்டன. அப்போது அங்கு திரண்டிருந்த அதிமுகவினர் காவல்துறையினருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். பின்னர் அவர்களைக் கைது செய்த போலீசார், ஜெயலலிதாவின் சிலையை அகற்றினர்.
கருத்துகள் இல்லை