Header Ads

  • சற்று முன்

    வங்கி கடன் மோசடி வழக்கில் பிரபல தொழில் அதிபர் கைது !!!

    13 வங்கிகளில் 750 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் சுபிக்ஷா சூப்பர் மார்க்கெட் நிறுவனர் சுப்ரமணியனை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர்.

    10 ஆண்டுகளுக்கு முன் சுபிக்ஷா சூப்பர் மார்க்கெட் சுப்ரமணியன் என்பவரால் தொடங்கப்பட்டது. ஆயிரத்து 600 கிளைகள் கொண்டிருந்த சுபிக்ஷா சூப்பர் மார்க்கெட் பெயரில் நாடு முழுவதும் மேலும், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிளைகள் தொடங்கப் போவதாகக் கூறி 13 வங்கிகளில் 750 கோடி ரூபாய் வரை அவர் கடன் பெற்றார்.

    மேலும் தொழில் தொடங்க பங்குதாரராக சேர்ப்பதாகக் கூறி 150 கோடி ரூபாய் வரை ஏமாற்றிவிட்டதாக 300-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்ததையடுத்து, பொருளாதாரக் குற்றப்பிரிவினர் சுப்ரமணியம் மீது ஏற்கனவே வழக்குப் பதிவு செய்தனர்.  
    இந்த நிலையில், 2009ம் ஆண்டு சுபிக்சா கடைகள் மூடப்பட்டன. இதனை தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் வங்கிகளில் வாங்கிய பணத்தைக் கொண்டு பல்வேறு சொத்துக்களை வாங்கியதாக 2015-ல் அமலாக்கத்துறை சுப்ரமணியன் மீது வழக்கு பதிவு செய்தது. குறிப்பாக பாங்க் ஆஃப் பரோடாவில் 77 கோடி ரூபாய் கடன் வாங்கி சொத்துக்களை வாங்கிய குற்றச்சாட்டில், முதற்கட்டமாக நீலாங்கரையில் 5 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. 

    இந்நிலையில், இந்த வழக்கில் சென்னையில் வைத்து சுப்ரமணியனைக் கைது செய்துள்ளனர். அவர் ஒட்டு மொத்தமாக 13 வங்கிகளில் சுமார் 750 கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்று மோசடி செய்துள்ளதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad