ஆந்திரா ஏரியில் சடலமக்கப்பட தமிழர்களின் உடல்கள் மீட்பு !
தமிழகத்தின் வட மாவட்டங்களிலிருந்து வறுமை காரணமாக ஆந்திர மாநில காடுகளில் கூலிக்கு செம்மரம் வெட்டச் செல்கிறார்கள் தமிழ் மக்கள். செம்மரக்கடத்தை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கும் ஆந்திர மாநில போலீசார் ஏற்கனவே 30 பேரை சுட்டுக் கொன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலம்பியாவில் அந்நாட்டு அதிபர் போதை பொருள் கடத்தலை தடுக்க நூற்றுக்கணக்கானவர்களை கொன்று குவித்தது போல ஆந்திர அரசும் கொத்துக் கொத்தாக செம்மரக்கட்டைகளை வெட்ட வருகிறவர்களை கொன்று குவித்து வருகிறது.
இந்நிலையில், ஆந்திர மாநிலம் கடப்பா அருகில் உள்ள ஓண்டி மெட்டா வனப்பகுதியில் உள்ள ஏரியில் ஐந்து பிணங்கள் மிதப்பதாக செய்திகள் வெளியானது. அழுகிய நிலையில் அச்சடங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், இவர்கள் யார் எதற்காக வந்தார்கள் என்ற தகவல் எதுவும் இல்லை.இவர்கள் யார் என்றும் அடையாளம் காணப்படவில்லை. ஆனால் இவர்கள் தமிழர்கள் என்றும் ஏரியில் மூழ்கி இறந்ததாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இவர்கள் செம்மரம் வெட்ட வந்த போது போலீசார் விரட்டியதால் தப்பிச் சென்ற போது ஏரியில் மூழ்கி உயிரிழந்ததாக ஆந்திர போலீசார் அதிகாரபூர்வமற்ற செய்திகளை கசியவிடுகின்றனர். ஆனால் செம்மரம் வெட்டச் சென்றவர்களைப் பிடித்து அடித்து பாதி உயிர் இருக்கும் போது தண்ணீரில் மூழ்கடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும், மாவட்டங்களில் இருந்து செம்மரம் வெட்டச் செல்கிறவர்கள் பற்றிய தகவல்களை போலீஸ் இன்பார்மர்கள் மூலம் தெரிந்து கொள்ளும் ஆந்திர போலீசார் அவர்களை பேருந்துகளில் வைத்தே பிடித்துச் செல்வது வாடிக்கையான ஒன்று. அப்படி பிடித்துச் செல்லப்பட்டும் இவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.எது எப்படி என்றாலும் இப்படியான கொலைகளில் சந்திரபாபு நாயுடு அரசாங்கம் ஈடுபடுவது மிகப்பெரிய மனித உரிமை மீறலாகும். சர்வதேச அளவில் இந்த பிரச்சனை எடுத்துச் செல்லப்பட வேண்டும்.
கருத்துகள் இல்லை