Header Ads

  • சற்று முன்

    பாதாளச் சாக்கடையைச் சுத்தம் செய்யும் பணியில் ரோபோ -கேரளா அரசு முடிவு


    இந்தியாவிலேயே முதல்முறையாகப் பாதாளச் சாக்கடையைச் சுத்தம் செய்யும் பணியில் ரோபோக்களைக் களமிறக்க உள்ள கேரள அரசுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மனித கழிவுகளை மனிதனே அகற்றும் நிலையை மாற்ற வேண்டுமென பல்வேறு தரப்பினர் வலியுறித்தி வருகின்றனர். 

    கழிவுநீர் பொங்கி வழியும் பாதாளச் சாக்கடைக்களில்  இறங்கி சுத்தம் செய்யும் பணியாளர்கள், விஷவாயு தாக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து  நீடித்து வருகிறது. செப்டிக் டாங்க் மற்றும் பாதாளச் சாக்கடைகளுக்குள் இறங்கி அடைப்புகளை அகற்றும்  பணி மிகவும் அபாயகரமானது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியில் கேரள அரசு முழுவீச்சில் இறங்கியுள்ளது. கேரளாவில் ஸ்டார்ட் அப் நிறுவனமான ‘ஜென்ரோபோடிக்ஸ்’ சாக்கடைகளைச் சுத்தம் செய்யும் ரோபோ இயந்திரத்தை வெற்றிகரமாகச் சோதனை செய்து அசத்தியுள்ளது. இன்னும் ஒரு சில நாள்களில் கேரளாவில் சாக்கடை சுத்தம் செய்யும் பணியில் ரோபோக்கள் ஈடுபடுத்தப்பட உள்ளன. 

    ``ரோபோ தயாரிப்புக்கான அனைத்து செலவுகளையும் கேரள அரசு ஏற்றுக்கொண்டது. உள்நாட்டு உற்பத்தியை ஊக்கப்படுத்துவதே எங்கள் நோக்கம். ஜென்ரோபோட்டிக்ஸ் நிறுவனம் தயாரித்த ரோபோக்கள் அடுத்த வாரம் களத்தில் இறங்குகின்றன'’ என்றார் கேரள நீர் ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் ஷைனாமோல்.

    இதுகுறித்து ஜென்ரோபோட்டிக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி விமல் கோவிந்த் கூறுகையில் ‘ப்ளூடூத், வைஃபை மற்றும் கட்டுப்பாட்டு பேனல்கள் ஆகியவை கொண்டிருக்கும் இந்த ரோபோவில் நான்கு கால்கள் மற்றும் சாக்கடைகள் இருந்து கழிவுகளை அள்ளும் வாளி போன்ற பாகமும் இணைக்கப்பட்டுள்ளன. இந்த ரோபோவுக்குப் ‘பெருச்சாளி’ (Bandicoot) எனப் பெயர் சூட்டியுள்ளோம். 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad