Header Ads

  • சற்று முன்

    லஞ்ச ஒழிப்பு போலீஸ்சாரால் .டி.எஸ்.பி. மற்றும் உதவி ஆய்வாளர் கைது !!

    ஆம்பூர் அருகே மணல் லாரி ஓட்ட 1 லட்சத்து  45 ஆயிரம் லஞ்சம் பெற்ற ஆம்பூர் டிஎஸ்பி தன்ராஜ், எஸ்.ஐ லூர்து ஜெயராஜ் வேலூர் லஞ்ச ஒழிப்பு துறையினரால் கைது.



    வேலூர் மாவட்டம் ஆம்பூர் சான்றோர்குப்பம் லட்சுமி நகரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (41). செங்கல் சூளை நடத்தி வருகிறார். அவர் 2 டிப்பர் லாரி, ஒரு டிராக்டர் வைத்துள்ளார். மணல் குவாரியில் மணல் எடுத்துச் செல்ல பர்மிட் வாங்கி வைத்திருந்தார். மணல் குவாரி மூடப்பட்ட நிலையில் பன்னீர்செல்வம் மணலை விற்பனை செய்யவேண்டும் எனவும் ஒரு லாரிக்கு ரூ.20 ஆயிரம் வீதம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என ஆம்பூர் டிஎஸ்பி தன்ராஜ் கூறியுள்ளார். மணல் லாரி ஓட்டாவிட்டால் வழக்குப்பதிவு செய்யப்படும் என மிரட்டியுள்ளார்.  இதையடுத்து பன்னீர்செல்வம் உள்ளிட்ட 4 பேர் மணல் எடுக்க முடிவானது. இதற்காக ஆம்பூர் நகர எஸ்.ஐ.லூர்து ஜெயராஜ் இடைதரகராக செயல்பட்டு  ஒரு லாரிக்கு ரூ.20 ஆயிரம் என 6 லாரிக்கு ரூ.1,20,000 மற்றும் பொங்கல் போனஸாக ரூ.25,000 என மொத்தம் ரூ.1,45,000  பணத்தை கேட்டுள்ளார்.


    இது குறித்து பன்னீர் செல்வம் வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்துள்ளார்.இப்புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு ADSP பாலசுப்ரமணியன் தலைமையில்  ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் உதவி ஆய்வாளர் லூர்து ஜெயராஜிடம் மற்றும் டி.எஸ்.பி தனராஜ் இடமும் பன்னீர்செல்வம் பணத்தை கொடுக்கும்போது மறைந்திருந்த லஞ்சஒழிப்பு போலீசார்டி.எஸ்.பி தனராஜ் மற்றும் உதவி ஆய்வாளர் லூர்து ஜெயராஜ் ஆகியோரை கையும் களவுமாக பிடித்து எஸ்.பி. இன் தனி அறையில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.பின்னர் எஸ்.பி. அலுவலகம் சுற்றிலும் சோதனையில் ஈடுப்பட்டனர்.பின்னர் நள்ளிரவு 1:30 மணிக்கு உதவி ஆய்வாளர் லூர்து ஜெயராஜ்  மற்றும் டி.எஸ்.பி.  தனராஜ் ஆகியோரை கைது செய்து அழைத்து சென்றனர்
     இதற்கிடையில் லஞ்ச புகாரில் டி.எஸ்.பி. தனராஜ் மற்றும் உதவி ஆய்வாளர் லூர்து ஜெயராஜ் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தததற்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்தும் மகிழ்ச்சியை கொண்டாடினர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad