அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு காப்பீட்டு திட்டம் அரசு அறிவிப்பு.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு உயிர் காப்பீட்டு திட்டம் கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.
இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் கொண்டுவரப்படாத புதிய திட்டமாக விபத்தில் சிக்கும் மாணவர்களுக்கு இழப்பீடு வழங்கும் முறையை கொண்டு வர முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் தலைமையின் கீழ் செயல்படும் பள்ளிக்கல்வி துறைக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக கூறினார்.
அதன்படி, பள்ளி மாணவர் விபத்தில் இறந்தால் ரூ.1 லட்சம், பெரிய காயம் ஏற்பட்டால் ரூ.50 ஆயிரம், சிறிய காயம் ஏற்பட்டால் ரூ.25 ஆயிரம் கொடுக்கப்படும் என்றும், இந்த தொகை ‘இன்சூரன்ஸ் பாலிசி’ என்பதன் மூலம் வழங்கப்படுவது கிடையாது என்றும், இந்த தொகை சம்பவம் நடந்த 48 மணி நேரத்தில் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
பின்னர் இது தொடர்பாக தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
2016-2017-ம் ஆண்டு கல்வி ஆண்டில் பள்ளிக்கல்வி துறையின் கட்டுப்பாட்டின் கீழ் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் என 37 ஆயிரத்து 201 அரசு பள்ளிகளும், 8 ஆயிரத்து 402 அரசு உதவி பெறும் பள்ளிகளும் என மொத்தம் 45 ஆயிரத்து 603 பள்ளிகள் செயல்படுகின்றன.
இதில் அரசு பள்ளிகளில் 1 முதல் பிளஸ்-2 வகுப்புகள் வரை 55 லட்சத்து 73 ஆயிரத்து 217 மாணவ-மாணவிகளும், அரசு உதவிபெறும் பள்ளிகளில் 29 லட்சத்து 51 ஆயிரத்து 84 மாணவ-மாணவிகளும் பயின்று வருகின்றனர்.
பள்ளி மாணவர்கள் வீட்டில் இருந்து பள்ளிக்கு செல்லும் போதும், வீட்டுக்கு திரும்பும்போதும் உரிய பாதுகாப்புடன் சென்றுவரும் பொருட்டு பள்ளிக்கல்வி இயக்ககத்தில் இருந்து அவ்வப்போது அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்டு வருகின்றன.
கருத்துகள் இல்லை