• சற்று முன்

    பேருந்து கட்டணம் குறித்து அமைக்கப்பட்ட திமுக குழு ஸ்டாலினிடம் அறிக்கை தாக்கல் செய்தது



    போக்குவரத்து கழகத்தை சீரமைப்பது குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்க திமுக சார்பில் ஏற்படுத்தப்பட்ட குழு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை தாக்கல் செய்தது. ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத் தொகை கேட்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு முன்பு போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தமிழக போக்குவரத்து கழகம் ரூ. 7000 கோடி நஷ்டத்தில் இயங்குவதால் அந்த தொகை கொடுக்க இயலாது என்று தமிழக அரசு கைவிரித்தது.

    எனினும் ஊழியர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி நீதிமன்றத்தை அணுகினர். ஓய்வூதிய நீதிபதி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு ஊதிய உயர்வு சதவீதம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் நஷ்டத்தில் இயங்கும் போக்குவரத்து கழகத்தை சீரமைப்பது தொடர்பாக தமிழக அரசுக்கு ஆலோசனை தர திமுக குழு ஒன்றை கடந்த மாதம் 28-ஆம் தேதி அமைத்தது. டி.ஆர். பாலு தலைமையிலான இக்குழுவில் முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, கே.என். நேரு, தொமுச சண்முகம், செங்குட்டுவன் எம்.எல்.ஏ. ஆகியோர் இடம்பெற்றனர். இக்குழுவினர் போக்குவரத்து கழகத்தை சீரமைப்பது குறித்த திட்டங்களை அறிக்கையாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினிடம் அளித்தனர். அவர் இதை தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வார்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad