Header Ads

  • சற்று முன்

    தள்ளு வண்டி பழவியாபாரிக்கு நேர்ந்த கொடூரம் - காவல்துறையின் அராஜகம் .....

    கோவில்பட்டி வீரவாஞ்சி நகரைச் சேர்ந்தவர் வேல்சாமி இவர் தள்ளுவண்டியில் வாழை பழ வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகன் சதிஷ், கோவில்பட்டியில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2வது ஆண்டு சிவில் பிரிவில் பயின்று வருகின்றார். இந்நிலையில் கடந்த 1 தேதி ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு வீரவாஞ்சி நகர் பகுதியில் சதிஷ் மற்றும் அவரது நண்பர்கள் கேக் வெட்டி புத்தாண்டு கொண்ட்டாடத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சதிஷ் நண்பர்கள் புத்தாண்டு கொண்டாடடிய இடத்தின் அருகில் இருந்தவர் வீட்டில் ஜன்னல் கண்ணாடியை யாரே உடைத்ததாக தெரிகிறது. இது குறித்து அந்த வீட்டின் உரிமையாளர் மேற்கு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜபிரபு தலைமையிலான போலீசார் அந்த பகுதிக்கு வந்து விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் அந்த பகுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட சதிஷ் மற்றும் அவரது நண்பர்கள் வீட்டிற்கு சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தியது மட்டுமின்றி சதிஷ் வீட்டில் இருந்த 2 லட்ச ரூபாய் மதிப்பிலான பைக்கினை காவல்துறையினர் எடுத்து சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து மாணவர் சதிஷ் தந்தை வேல்சாமி காவல் நிலையத்திற்கு சென்று போலீசாரிடம் கேட்ட போது பைக் நீதிமன்றத்திற்கு வரும், அங்கு சென்று உரிய ஆவணங்களை காட்டி, எடுத்து கொள்ளவும் என்று கூறியதாக தெரிகிறது. ஆனால் நீதிமன்றத்திற்கு பைக் கொண்டு வராத காரணத்தினால் மீண்டும் காவல்நிலையத்தில் வேல்சாமி முறையிட்ட போது காவல்துறையினர் எவ்வித பதிலை தரமால்  இருந்துள்ளனர். இந்நிலையில் கோவில்பட்டி அருகேயுள்ள இடைச்செவல் காட்டுபகுதியில் அநாதையாக கிடந்ததாக மாணவன் சதிஷ்; பைக்கினை போலீசார் தாசில்தாரிடம் ஒப்படைத்து சான்று பெற்றதாக வேலுச்சாமிக்கு தகவல் கிடைத்துள்ளது. மேலும் பைக் என்ஜீன் எண், பைக்கின் முக்கிய பாகங்கள் அனைத்தையும் சேதப்படுத்தி, பைக்கினை பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதை கண்ட வேல்சாமி மற்றும் அவரது உறவினர்கள் கோவில்பட்டி டி.எஸ்.பி. அலுவலகத்தினை முற்றுக்கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், எவ்வித தவறும் செய்யாத  மகனின் பைக்கினை எடுத்து வந்து , பணம் பறிக்கும் நோக்கில் தரமால், நீதிமன்றத்திலும், ஒப்படைக்காமலும், பைக்கினை சேதப்படுத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு அளித்தனர். இதையெடுத்து முற்றிலுமாக சேதமடைந்த பைக் சதிஷ் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சாதராண ஏழை, எளிய மக்கள் பைக் வாங்க கூடாது, இல்லையா அந்த மாணவனின் சமூகம் தான் காவல்துறைக்கு பிரச்சினையா? என்பது தெரியவில்லை, விளக்கம் கேட்க சென்றால் அங்கே செய்தியாளர்களுக்கு தடை தான்…

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad