எட்டயபுரத்தில் எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்தநாள் விழா
அ.இ.அ.தி.மு.க. அம்மா அணி சார்பில் எட்டயபுரம் மேலவாசலில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா புதூர் ஒன்றிய கழக செயலாளர் தனவதி தலைமையில் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் கோவிந்தராஜபொருமாள் மற்றும் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் கவிபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், நடந்த விழாவில் அ.இ.அ.தி.மு.க.அம்மா அணி எட்டயபுரம் நகர கழக செயலாளர் முனியசாமி எம்.ஜி.ஆரின் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். விழாவில் கலந்து கொண்டவர்கள் நகர கழக துணை செயலாளர் சுப்பையா, நகர அம்மா பேரவை செயலாளர் பேச்சியப்பன், மகளிரணி செல்வி, ஆசிரியர் வேலுச்சாமி, மாவட்ட பிரதிநிதி ராமசாமி மற்றும் தினகரன் பேரவை செயலாளர் கருப்பசாமி உட்பட கழக நிவாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
நமது நிருபர்
கருத்துகள் இல்லை