• சற்று முன்

    சென்னை பாலன் இல்லத்தில் நூல் வெளியீட்டு விழா


    தோழர் ஜீவா திருஉருவ படத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த  தோழர் ஆர்.நல்லகண்ணு மலர் மாலை அணிவித்து விழாவினை துவங்கி வைத்தார்.



    சென்னை பாலன் இல்லத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நவம்பர் புரட்சி சிறப்பு மலர், மற்றும்  தாமரை ஜீவா சிறப்பு மலர் வெளியீடு நடைபெற்றது .



    நவம்பர் புரட்சி மலரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்  தேசிய செயலாளர் தோழர் டி.ராஜா M.P.,  வெளியிட அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொது செயலாளர்  T.H. வெங்கடாசலம்  பெற்றுக்கொண்டார்.


    தாமரை ஜீவா மலரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்  ஆர். நல்லக்கண்ணு வெளியிட ஜீவாவின் மருமகள் திருமதி. ஜீவா மணிக்குமார் பெற்றுக்  கொண்டார். வரவேற்புரை P. சேதுராமன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினர்  நிகழ்த்த,  டி. ராஜா, ஆர். நல்லக்கண்ணு வாழ்த்துரை வழங்க  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா .முத்தரசன் தொகுப்புரை நிகழ்த்த ஜனசக்தி ஆசிரியர் ராஜ்மோகன் நன்றியுரை வழங்க விழா இனிதே நிறைவு பெற்றது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad