• சற்று முன்

    எட்டயபுரத்தில் பஸ் கட்டண உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய கம்யூ., கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


    எட்டயபுரம் பேருந்து நிலையம் முன்பு நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஐ எட்டயபுரம் தாலுகா குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். கண்டன ஆர்ப்பாட்டத்திற்க்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கோவில்பட்டி சட்டமன்ற முன்னாள் எம்எல்ஏ. ராஜேந்திரன் தொடக்க உரையாற்றினார்.  தொடர்ந்து மக்களை பாதிக்கும் பஸ் கட்டண உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் சங்க செயலாளர் நல்லையா, தாலுகா குழு பொருளாளர் கனகராஜு மற்றும் எட்டயபுரம் நகர செயலாளர் சேது ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். 
    கண்டன ஆர்ப்பாட்டத்தில் வாகன ஓட்டுனர்கள் சங்க பொறுப்பாளர்   ஹரிஹரசுதன் உட்பட ஏராளமான கட்சியினர் கலந்து கொண்ட கண்டன ஆர்ப்பாட்டத்தின் முடிவில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநில செயலாளர் பாலமுருகன் நன்றி கூறினார்.          

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad