Header Ads

 • சற்று முன்

  கோவில்பட்டி அருகே 7 ஆண்டுகளாக சுகாதார சீர்கேட்டில் சிக்கி தவிக்கும் மக்கள் - கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகள்


  கோவில்பட்டி அருகேயுள்ள இலுப்பையூரணி ஊராட்சிக்குட்பட்ட மறவர் காலனி பகுதியில் 19க்கும் மேற்பட்டவர்கள் டெங்கு காய்ச்சல், 50க்கும் மேற்பட்டவர்கள் மர்மகாய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக சுகாதார சீர்கேட்டினால் அவதிப்பட்டு வரும் தங்களை சுகாதார துறையோ மற்ற அரசு அதிகாரிகளோ கண்டு கொள்ளவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.  கோவில்பட்டி அருகேயுள்ள இலுப்பையூரணி ஊராட்சிக்குட்பட்ட பகுதி மறவர் காலனி. இந்த பகுதியில் 2000க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். கட்டிடம் மற்றும் தீப்பெட்டி தொழிலாளிகள் அதிகம் நிறைந்த பகுதி.வடக்கு இலுப்பையூரணி அருகில் வளர்ச்சியடைந்த இந்த பகுதியில் அடிப்படை வசதிகள் என்பது கேள்விகுறிதான். கடலையூர் சாலை மற்றும் தாமஸ் நகர் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் அனைத்து தேங்கி நிற்கும் இடம் மறவர்காலனி பகுதி தான். இங்குள்ள வீடுகளின் பின்னடி வாசல் இருக்கிறதோ இல்லையோ சாக்கடை நீர் தேங்கியிருக்கும் வாடிகால் பகுதியாக மாறியுள்ளது. இது தவிர டாஸ்மாக் கடைகளில் இருந்து வீசப்படும் கழிவுகள், பாட்டிகள் உள்ளிட்ட எல்லா குப்பைகழிவுகளும் இங்கு தான் கொட்டப்பட்டு வருகிறது. பெயரளவிற்கு குப்பை தொட்டிகள் வைத்து இருந்தாலும், குப்பைகளை எடுத்து செல்ல ஊராட்சி துப்புரவு பணியாளர்கள் வருவதில் கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக சாக்கடை மற்றும் குப்பைகளின் இடையே வாழ்வினை நடத்தி வரும் இந்த மக்களுக்கு தூற்நாற்றம் பரிசு என்றால் சுகாதார சீர்கேட்டினால் பலவித தொற்று நோய்கள் இலவச இணைப்புகளாக வந்துள்ளன. சாக்கடை நீரோடை வழியாக குடிநீர் குழாய் வருவதால், குழாயை சேதமடைந்து குடிநீர் சாக்கடை நீருடன் வருகிறது. கடந்த 3 மாதங்களில் இந்த பகுதியை சேர்ந்த 67 பேர் டெங்குகாய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளனர். தற்போது மேலும் 16 பேருக்கு தற்போது டெங்கு காய்ச்சல் வந்து தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 50க்கும் மேற்பட்டவர்கள் என்ன காய்ச்சல் என்று தெரியமால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நிலைமை. இது தவிர வாந்தி,பேதி என முதியவர்கள் , குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்பட்டனர். கடந்த 7 ஆண்டுகளாக அனைத்து அரசு அலுவலங்களுக்கு தங்களது குறைகளை நேரிலும், தபால் மூலமாக அனுப்பியும் எவ்வித தீர்வும் ஏற்படவில்லை, ஒரே ஒரு முறை தற்போது அமைச்சராக இருக்கும் கடம்பூர்.செ.ராஜீ, எம்.எல்.ஏ.வாக இருந்த போது அந்த மக்களின் குறையை அறிந்து சாக்கடைநீர் போகவும், இந்த பகுதியில் பாலம் அமைக்கவும் ரூ.3லட்சம் நிதி உதவி பெற்று தந்தார். ஆனால் அப்போது இருந்த ஊராட்சி நிர்வாகம் மாற்று கட்சி என்பதால், போதிய நிதி இல்லை என்று கூறி வேறு திட்டப்பணிக்கு அந்த பணத்தினை மாற்றி விட்டது. பலமுறை சுகாதார துறையினருக்கு இப்பகுதியில் ஏற்படும் தொற்று நோய்கள் குறித்து தகவல் கொடுத்தும், இது வரை எவ்வித முன் எச்சரிக்கை எடுக்கவில்லை, அரசு மருத்துவமனைக்கு சென்று அலைய முடியாது என்பதால், கந்து வட்டிக்கு பணம் வாங்கி தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலை.. ஆரம்ப கட்டத்தில் இருக்கும் போது நடவடிக்கை எடுக்காத அரசு, உயிரிழப்பு ஏற்பட்ட பிறகு வந்து என்ன பயன் என்று மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். இந்த பகுதியில் சுமாhர் 600க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனா. இவற்றில் 96சதவீதம் அதிமுகவிற்கு வாக்காளிக்க கூடியவர்கள் தான். அதிமுகவிற்கு வாக்காளித்த காரணத்திற்காக போன தடைவ ஊராட்சி பொறுப்பில் இருந்தவர்கள் புறக்கணித்து வந்தனர். தற்போது அதனை அரசு அதிகாரிகள் செய்து வருவதாக தெரிவித்துள்ளனர். இந்த பகுதியில் நிலவும் பிரச்சினை குறித்து கடந்த சில தினங்களுக்கு ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டாலும், செவிடன் காதில் ஊதிய சங்காக உள்ளது. இனியாவது இந்த அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா இல்லை சுகாதார சீர்கேட்டினால் உயிரிழப்பு ஏற்பட்டு பின்பு தான் தங்கள் பார்வையினை இந்த பக்கம் திருப்புவர்களா ? 
  குறிப்பு :  கடந்த 7 ஆண்டுகளாக ஊடகங்களாவது இந்த செய்தியை அதிகாரிகளிடம் சேர்ப்பார்கள் என்று மக்கள் பலமுறை தெரிவித்து, தங்களுடைய விளம்பரம் பாதிக்கப்படும் என்ற காரணத்திற்காக இந்த மக்களை கண்டுகொள்ளவில்லை என்பது மக்களின் வேதனையான பதில்

  கருத்துகள் இல்லை

  Post Top Ad

  Post Bottom Ad