Header Ads

  • சற்று முன்

    சிக்கன்குனியா போய் ... பன்றி காய்சல் போய் ..... குரங்கு காய்சல்


    மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் உதகையில் குரங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தி உள்ளதுநீலகிரி மாவட்ட எல்லையில் உள்ள, கேரள மாநிலம் சுல்தான்பத் தேரியில், ஒருவருக்கு குரங்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்டது. இதனையடுத்து நீலகிரி மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்டம் முழுவதும் முடுக்கி விட்டுள்ளனர். குரங்கு காய்ச்சல் வராமல் தடுக்க, நோய்தடுப்பு மருந்துகளும் கொடுக்கப்பட்டு வருகின்றன.
    கர்நாடக, கேரள மாநில எல்லைகளில் உள்ள கூடலூர், பந்தலூர், முதுகுழி , நாகம்பள்ளி, போஸ்பாற போன்ற பகுதிகளில் உள்ள ஆதிவாசி மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதுவரை 10 ஆயிரம் பேருக்கு குரங்கு காய்ச்சலுக்கான தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த காய்ச்சல், செத்துப் போன குரங்குகளின் உடலில் இருந்து பரவும் ஒருவித வைரஸ் மூலம் மனிதர்களை பாதிக்கும் என்பதால், மாவட்டத்தில் எங்கு குரங்குகள் இறந்தாலும், அதன் ரத்த மாதிரியை சேகரித்து, மணிப்பாலில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

    தமிழகத்திற்குள் குரங்கு காய்ச்சல் வந்துவிடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாகவும், உதகை சுற்றுலா வரும் பயணிகள் பீதியடைய வேண்டாம் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad