Header Ads

  • சற்று முன்

    விவசாயியை பின்னுக்கு தள்ளிய பொங்கல்

    உழுதுண்டு வாழ்பவரே வாழ்வர் மற்றோரெல்லாம்
    தொழுதுண்டு பின் செல்பவர்
    என்பது வள்ளுவர் வாக்கு. ஆனால் தமிழகத்தில் இன்று விவசாயிகள் நிலை தொழுதுண்டு வாழ்பவர் பின் செல்லுகின்ற நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டனர். தற்போது செயற்கை தாய், செயற்கை மருத்துவம் , செயற்கை காய்கறிகள், கனிகள் என அனைத்தும் செயற்கையாக மாறியதால் தமிழர்களின் தை பொங்கலும் இயற்கையை மறந்து செயற்கையாகவே  மாறிவிட்டது.
    விவசாயிகள் தற்கொலை, விவசாயிகள் கடன் தொல்லை என விவசாயிகளின் பிரச்சினை சிந்திக்காத தீர்வு காணாத அரசியல் வாதிகள், பொது மக்கள் மத்தியில் வாழும் சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளளோம். முன்பெல்லாம் பொங்கல் என்றால் விவசாயிகள் நிலத்தை  குத்தகைக்கு விட்டு அதன் மூலம்  வந்த விளைச்லை மனநிறைவுடன் பங்கீட்டு பொங்கல்லை கொண்டாடுவர். ஆனால் தற்காலிக பொங்கல் விவசாயிகளை மறந்து அவர்கள் துன்பத்தையும் இன்னல்களையும் மறந்து போலியாக நாகரிக பொங்கல்லை கொண்டடிவருகிறோம்.
    விவசாயிகள் உழுவதற்கு பயன்படுத்திய  ஏர்கலப்பையை வைத்து நிலத்தில் விளைந்த நெற்களை கொண்டு புது பனையில்  பொங்கலிட்டு இவர்களின் விளைச்சலுக்கு உறுதுணையாக இருந்த  காளையை வழிபட்டு முழு முதற் கடவுளான சூரிய பகவானை வணங்கி பொங்கலோ பொங்கல் என்று கூவிய காலம் போய் தற்போது நாகரிக பொங்கலாகவும் பழையன கழித்தல் புதிய புகுதல் என்கிற வார்த்தைக்கு ஏற்ப இன்றைக்கு நகரில் கொண்டாடுவதை போல கிராமங்களிலும் கொண்டாட ஆரம்பித்துவிட்டனர்.
    தற்போது விவசாயிகள் காளைகளுக்கு பதிலாக கார்பரேட் முதலாளிகளை கடவுளாக கொண்டாடி வருகின்றனர். விவசாயிகளுக்காக ஏற்பட்ட சங்கங்களும் கார்பரேட் முதலாளிகளுக்கு அடிமைகளாக மாறிவிட்டனர்.உற்பத்தி செய்தவன் பின்னுக்கு தள்ளப்பட்டுவிட்டான்.விற்பனை செய்தவன் முன்னுக்கு வந்துவிட்டான். உற்பத்தி செய்கின்ற விவசாயி கால் விலையும்,கால் ஆடையையும் அணிகிறான். விற்பனை செய்தவனோ முழு லாபத்தையும் முழு ஆடையையும் அணிந்து வலம் வருகிறான். விவசாயி நிலங்கள் எல்லாம் இன்று குடியிருப்பு பகுதிகளாக மாறிய பிறகு விவசாயம் எப்படி வளமாக இருக்கும்.உழவுக்கு கை கொடுப்போம் என்று சொல்லுகிறோமே தவிர உழவுக்கு கை கொடுக்கலனாலும் பரவாயில்லை கால் வாராமல் இருந்தால் போதும்.
    உழவுக்குந் தொழிலுக்கும் வந்தனைசெய்வோம் - வீனில் 
    உண்டுகளித் திருப்போரை நிந்தனைசெய்வோம்  
    விழலுக்கு நீர்பாய்ச்சி மாயமாட்டோம் -வெறும் 
    வீணருக் குழைத்துடலாம் ஓயமாட்டோம் .
    என்று பாரதி பாடிய பாடல் வெறும் ஏட்டோடு நின்றுவிட்டது . விவசாயி மகிழ்ச்சி நமக்கு நிறைவான பொங்கல் என்று கூறி உரையை நிறைவு செய்கிறேன் .

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad