கொண்டித்தோப்பு காவலர் குடியிருப்பில் சமத்துவ பொங்கல்
சென்னை கொண்டித்தோப்பு காவலர் குடியிருப்பில் காவலர்கள் பொங்கல் திருநாளை கோலாகலமாக கொண்டாடினர்.
கொண்டித்தோப்பு காவலர் குடியிருப்பு வளாகத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் பங்கேற்ற காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் , காவலர் குடும்பத்தினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இதில் கூடுதல் ஆணையர் ஜெயராமன், இணை ஆணையர் சுதாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அம்பத்தூரில் நடந்த பொங்கல் விழா காவலர்களின் குதுகலத்தால் கலர்புல்லாக களைகட்டியது தினமும் சீருடையில் வந்த காவலர்கள் வேட்டி சட்டையுடன் பாரம்பரிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று அசத்தினர்
கருத்துகள் இல்லை