குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

எல்லோராலும் எம்ஜிஆர் போல் வரமுடியாது - அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ


எல்லோராலும் எம்ஜிஆர் போல் வரமுடியாது,  புலியை பார்த்து பூனை சூடு போட்ட கதை போன்று ஆகிவிடும் என  ரஜினி குறித்து அமைச்சர்  கடம்பூர் செ.ராஜூ விமர்சித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் மனித நேய உதவும் கரங்கள் என்ற அமைப்பு சார்பில் புத்தாண்டு விழா மற்றும் மும்மத கூட்டு பிராத்தனை நடைபெற்றது. இதில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர். செ. ராஜூ கலந்து கொண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு பழம், பிராட், பிஸ்கட் ஆகியவைகளை வழங்கினார். தொடர்ந்து சிறப்பாக பணியாற்றி மருத்துவமனை ஊழியர்களுக்கு விருது வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில் இந்த ஆட்சி கலைந்து விடும் என்று எதிர்கட்சிகள் கூறுவது வழக்கமான ஒன்றுதான், பல முறை கூறிய போது இந்த ஆட்சி சிறப்பாக தான் நடைபெற்று வருகிறது. சிஸ்டம் சரியில்லை என்று கூறும் நடிகர் ரஜினிகாந்த் எந்த சிஸ்டம் சரியில்லை என்று கூற தெரியவில்லை, இதை தான் முதல்வரும் கேள்வி எழுப்பினர், வார்த்தைக்கு அர்த்தம் தெரியாதவர்கள் அரசியலில் ஆழம் பார்க்க நினைக்கின்றனர், எல்லோரும் எம்.ஜி.ஆர் போன்று வர வேண்டும் என்று நினைத்து திரைப்படத்துறையினர் பலரும் காணமால் போய் உள்ளனர். புலியை பார்த்து பூனை சூடு போட்ட கதை போன்று ஆகிவிடும், தமிழகம் திரவிட மண். இங்கு திராவிட கட்சிகள் தான் ஆட்சி செய்யும், மற்ற அமைப்புகளுக்கு இங்கு வேலையில்லை என்று தெரிவித்தார்.
              
                                                                                            நமது நிருபர்  இளசை  லெனின் 

கருத்துரையிடுக

புதியது பழையவை

Ads

Jurisprudence Legal Tech LLP

Jurisprudence Legal Tech

வழக்கறிஞர்களுக்கான 'Ready-to-File' டிராஃப்டிங் சேவை! சிவில் & BNS, BNSS, BSA வரைவுகளை உடனே பெறலாம்.

Jurisprudence Legal Tech LLP

Jurisprudence Legal Tech LLP

சிவில் மற்றும் BNS, BNSS, BSA வழக்குகளுக்கான Ready-to-file டிராஃப்டிங் தீர்வுகள்.